)
Watch Ahmedabad Airplane Crash Viral Video : குஜராத் தலைநகர், அகமதாபாத்தில் இருந்து, லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று 1.39 மணியளவில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விமானத்தில் பயணிகள், விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் என சுமார் 242 பேர் பயணித்திருக்கின்றனர்.
விமான விபத்து:
அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய AI 171 விமானம், லண்டன் காட்விக் விமான நிலையத்துக்கு செல்வதற்காக, இன்று மதியம் 1.17 மணியளவில் டேக்-ஆஃப் ஆனது. ஆனால், கிளம்பிய 10 நிமிடங்களுக்குள்ளாகவே இந்த விமானம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 11 குழந்தைகள், 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் என 242 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானத்தை சபர்வால் என்பவர் இயக்கியிருக்கிறார், இணை விமானியாக க்ளைவ் குண்டெர் இருந்திருக்கிறார். இவர்கள் இருவருக்குமே விமானிகளாக அனுபவம் இருப்பதாக கூறப்படுகிறது.
விமான விபத்து ஏற்பட்டிருக்கும் இடத்திற்கு 90 பேர்கொண்ட மீட்புக்குழுவினர் விரைந்திருக்கின்றனர். இந்த விமான விபத்து குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் யாரெல்லாம் உயிரிழந்திருக்கின்றனர். என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளாகும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் திக் திக் காட்சி!
ஏர் இந்திய விமானம், நேராக செல்வதும், அதன் பிறகு விபத்துக்குள்ளாகும் கட்சிகளூம் அருகில் இருக்கும் கட்டத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
LIVE VIDEO
— Vijaykumar Desai (@KumarVijayDesai) June 12, 2025
Flight AI171, operating Ahmedabad-London Gatwick, was involved in an incident today#Ahmedabadplanecrash #london #planecrash #Ahmedabad #AirIndia pic.twitter.com/XFKVYVPf5k
முதலில் நேராக சென்று கொண்டிருந்த அந்த விமானம், அதன் பிறகு கீழ் நோக்கி சென்று, நேராக மோதி வெடிப்பதும், நெருப்பு பிழம்பு பீரிட்டு அடிப்பதும், பின்னர் கரும்புகை சூழ்வதும் பதிவாகியிருக்கிறது. 18 நொடிகள் மட்டுமே அடங்கிய இந்த வீடியோ, தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
பிரிட்டனை சேர்ந்தவர்கள் பலர் இந்த விமான விபத்தில் சிக்கியிருப்பதையொட்டி, பிரிட்டன் அரசாங்கம் உதவி எண்ணை அறிவித்திருக்கிறது. மேலும், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அந்த அரசு அறிவித்திருக்கிறது. ஏர் இந்திய நிறுவனம் தங்களின் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில், தங்களது சமூக வலைதள பக்கங்களில் போட்டோவை கருப்பாக வைத்துள்ளது. இது தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ