விவசாயிகள் நலன் கருதி ஓய்வின்றி உழைக்கும் மத்திய அரசு! மோடி பேச்சு!
விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது என்று ``நமோ ஆப்`` மூலம் பிரதமர் மோடி பேசினார்!
பிரதமர் மோடி, மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து நமோ ஆப் மூலம் மாதம் ஒரு முறை கலந்துரையாடுவது வழக்கம். அதன்படி, இன்று அவர் ''நமோ மொபைல் ஆப்'' மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடினர் அப்போது அவர் கூறும்போது,,!
விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது என்றார். மேலும் அவர், நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகள் மீது மத்திய அரசு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், வேளாண்மையில் மகத்தான வளர்ச்சியை ஏற்படுத்தவே திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகளுக்காக மத்திய அரசு செயப்பட்டு வருவதாகவும், கூறினார். மேலும், காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது என்றார்.