260 உயிர்களை பறித்த விமான விபத்து..கண்டுகொள்ளாமல் கூத்தடிக்கும் Air India ஊழியர்கள்! வைரல் வீடியோ..

Watch Video Air India Staffs Dancing Plane Crash: ஏர் இந்தியா விமான விபத்து நடந்த சுவடு இன்னும் மறையவில்லை. அதற்குள்ளாக, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 24, 2025, 05:33 PM IST
  • ஏர் இந்தியா விமான விபத்து
  • ஆட்டம் போட்ட ஊழியர்கள்
  • இது உண்மையான வீடியோவா?
260 உயிர்களை பறித்த விமான விபத்து..கண்டுகொள்ளாமல் கூத்தடிக்கும் Air India ஊழியர்கள்! வைரல் வீடியோ..

Watch Video Air India Staffs Dancing Plane Crash: ஜூன் 12ஆம் தேதி நடந்த அகமதாபாத் விமான விபத்து, 260 உயிர்களை பறித்துள்ளது. பல கனவுகளுடன் விமானத்தில் பயணித்தவர்களின் உயிருடன் சேர்த்து, மருத்துவராகும் கனவுடன் இருந்த எதிர்கால மருத்துவ ஊழியர்களின் உயிரையும் இந்த விமான விபத்து பறித்துக்கொண்டது. ஏர் இந்தியாவின் இந்த விமான விபத்துக்கு என்ன காரணம் என்று விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது அலுவலகத்தில் நடனமாடி மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add Zee News as a Preferred Source

260 உயிர்களை பறித்த விபத்து..!

ஏர் இந்தியாவின் AI-171, போயிங் 787 ரக விமானம், கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று அகமதாபாத் சர்தார் வலாபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டது. 242 பேருடன் கிளம்பிய அந்த விமானம், புறப்பட்ட சில வினாடிகளிலேயே மருத்துவ கல்லூரி மாணவர்களின் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர அனைவரும் உயிரிழந்தனர். கல்லூரி  மாணவர்கள், சாலையில் இருந்தவர்கள் என மொத்தமாக 260 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்தில், விமானத்தில் பயணித்தவர்களில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி, மனைவியின் அஸ்தியை கரைக்க சென்ற கணவர், வேலையை விட்டுவிட்டு லண்டனில் புது வாழ்க்கை தொடங்க இருந்த பல் மருத்துவர் என அப்பாவி உயிர்கள் பல பரிபோயின.

ஏர் இந்தியா ஊழியர்களின் வீடியோ:

இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “இத்தனை உயிர்களை பறித்த அந்த விமான விபத்து நடந்து சில நாட்களே ஆகின்றன, அதற்குள் சம்பந்தப்பட்ட ஏர் இந்தியாவின் ஊழியர்கள் ஜாலியாக நடனமாடுகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வீடியோ ஏர் இந்தியாவின் குருகிராம் அலுவலகத்தில் நடந்த அலுவலக விருந்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில், AISATS இன் தலைமை இயக்க அதிகாரி ஆபிரகாம் ஜகாரியா, ஏர் இந்தியாவின் தலைமை நிதி அதிகாரி, பொது மேலாளர், சம்ப்ரீத் கோட்டியன், பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் பொது மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

AISATS டாடா குழுமத்தின் ஏர் இந்தியா லிமிடெட் மற்றும் சிங்கப்பூரின் SATS லிமிடெட் இடையேயான 50-50 கூட்டு முயற்சியாகும். இந்த நிறுவனம் விமான நிலையத்தின் தரை சேவைகளை கவனித்துக்கொள்கிறது. இவர்களின் சேவையில் அகமதாபாத் விமான விபத்தை சந்தித்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானமும் ஒன்றாகும்.

கோபமான மக்கள்:

விமான விபத்துக்குள்ளான குடும்பங்கள், மீளா சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் இப்படி அலுவலத்தில் கூத்தடிப்பது முறையா? என்று மக்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இப்படிப்பட்ட செய்கைகள் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பற்றது போல இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனமும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், முற்றிலும் சூழலுக்குப் புறம்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதை AISATS அறிந்திருக்கிறது. இருப்பினும், இதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய எந்தவொரு உணர்ச்சி ரீதியான அசௌகரியத்திற்கும் நாங்கள் மனதார வருந்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு சிலர், இந்த வீடியோ விமான விபத்துக்கு முன்பு எடுத்ததா அல்லது அதன் பிறகு எடுக்கப்பட்டதா என்பது குறித்த ஆராய்ச்சியிலும் சிலர் இறங்கியிருக்கின்றனர்.

மேலும் படிக்க | ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. புகார் அளித்த ஊழியர்கள் பணிநீக்கம்!

மேலும் படிக்க | விமான விபத்தை படம் பிடித்த சிறுவன்: வைரல் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News