Watch Video Draupadi Murmu Turns Emotional : இந்திய குடியரசு தலைவராக 2022ஆம் ஆண்டு முதல் பதவியில் இருப்பவர் திரௌபதி முர்மு. இவருக்கு, ஜூன் 20ஆம் தேதியான நேற்று பிறந்தநாள். இதையொட்டி, அவரது பிறந்தநாள் விழாவில் நடந்த ஒரு சம்பவம், அவரை அழ வைத்துள்ளது.
திரவுபதி முர்மு:
இந்தியாவின் முதலாவது பழங்குடியினத்தை சேர்ந்த குடியரசு தலைவராக இருப்பவர், திரௌபதி முர்மு. பிரதீபா பாட்டிலுக்கு அடுத்த 2வது பெண் ஜனாதிபதி இவர்தான். ஜார்காண்டில் 2015ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஆளுநராக இருந்த இவர், 2022ல் இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி ஏற்றார். பழங்குடியின மக்களுக்கான குரலாகவும், குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கான உந்துகோலாகவும் ராஷ்ரபதி பவனில் ஐகானாக இருக்கிறார், திரௌபதி முர்மு. அதே போல, சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவின் முதல் குடியரசு தலைவராகவும் இருக்கிறார்.
வைரலான வீடியோ:
டேராடூனில் உள்ள தேசிய மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு திரௌபதி முர்மு தனது பிறந்தநாளை ஒட்டி சென்றிருந்தார். இங்கு, இவரை கௌரவிக்கும் விதமாகவும், அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும் அங்கிருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒரு பாடலை பாடினர்.
President Droupadi Murmu turns emotional.
On her birthday today, during a program in Dehradun, specially-abled children sang a heartfelt song for the Hon'ble President.
Listening to the children’s voices, President Murmu was visibly moved.#PresidentMurmu #DroupadiMurmu… pic.twitter.com/8JHJ5CW1y4— VARTA ( वार्ता ) (@varta24news) June 20, 2025
இந்த பாடலை கேட்ட போது அவர் நெகிழ்ந்து போன காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் அந்த பாடலை பாடப்பாட, திரௌபதி முர்மு அடக்க முடியாமல் அழுவதும், கண்களை கேமராவிடம் இருந்து மூடிக்கொள்வதும் பதிவாகியிருக்கிறது. பின்னர், அவருக்கு அருகில் வந்த ஒரு பாதுகாப்பு படை வீரர், டிஷ்யூ பேப்பரை எடுத்து கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அவர், அழுகையை துடைத்துக்கொண்டே இருந்தார்.
அந்த குழந்தைகளின் குரலை கேட்ட பின்பு, அவர்களின் அன்பால் நெகிழ்ந்து போன திரௌபதி முர்மு, இப்படி கண்ணீர் விட்டது, தங்களின் கண்களையும் கலங்க வைத்திருப்பதாக இணையவாசிகள் பலர் தெரிவித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடல்:
இதற்கு பிறகு பார்வை குறைபாடு உள்ளவர்களையும், பிற மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் சந்தித்த திரவுபதி முர்மு, அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், அவர்களுக்காக உருவாக்கப்பட உள்ள மாதிரி பள்ளி, அறிவியல் ஆய்வகம் மற்றும் கணினி ஆய்வகத்தையும் பார்வையிட்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து பேசிய திரௌபதி முர்மு, அவர்கள் வளர அரசு சம வாய்ப்பு கொடுக்கும் வகையில் கொள்கைகளை வகுத்துள்ளதாகவும் கூறினார். மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவ, அதற்குரிய கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவற்றுடன் அரசு வேலை பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளும், இந்தியாவை இன்னும் சிறப்பாக்குவதில் முக்கிய பங்காற்றுபவர்கள் என்றும், அவர்களின் துணையுடன் இந்தியாவை இன்னும் மேன்மையடைய செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விழாவில், தேராதூன் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மற்றும் ஆளுநர் குர்மீத் சிங் (ஓய்வு பெற்ற லெஃப்டினண்ட்) உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு -வின் குடியரசு தின உரையின் முக்கிய அம்சங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ