சிறுநீரில் கண்களை கழுவிய பெண்! அதிர்ந்து போன மருத்துவர்கள்..வைரல் வீடியோ..

Watch Video Urine Eye Wash: ஒரு பெண், சிறுநீரால் கண்களை கழுவிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து மருத்துவர்கள் இவரது செயலுக்கு அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.   

Written by - Yuvashree | Last Updated : Jun 27, 2025, 12:52 PM IST
  • சிறுநீரில் கண்களை கழுவுதல்
  • பெண் வெளியிட்ட வீடியோ
  • மருத்துவர்கள் கடும் கண்டனம்
சிறுநீரில் கண்களை கழுவிய பெண்! அதிர்ந்து போன மருத்துவர்கள்..வைரல் வீடியோ..

Watch Video Urine Eye Wash: இணையதளத்தின் வளர்ச்சி காரணமாக, பலவித ட்ரெண்ட்கள் நெட்டிசன்களால் செய்யப்பட்டு வருகிறது. அப்படி ஒரு ட்ரெண்ட், Urine Eye Wash. சமீபத்தில் ஒரு பெண், சிறுநீரால் கண்களை கழுவிய  வீட்யோ இணையத்தில் வைரலானது. அவர் ஏன் தனது கண்களை சிறுநீரால் கழுவினார் என்பதையும், இதற்கு மருத்துவர்கள் என்ன கூறியிருக்கின்றனர் என்பதையும் இங்கு பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

சிறுநீரால் கண்களை கழுவுதல்..

புனேவை சேர்ந்த நுபுர் பிட்டி எனும் பெண்தான், சிறுநீரால் கண்களை கழுவும் வீடியோவை வேளியிட்டிருக்கிறார். இப்படி கழுவுவதால், மருந்தே இல்லாமல் கண் பிரச்சனைகள் குணமாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் இரு டம்ளர்களில் சிறுநீரை வைத்துக்கொண்டு கண்களை கழுவுவதோடு அது கண் ட்ரை ஆவதை தடுக்கும் என்றும், கண் எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கும் என்றும் விளக்கி கூறியிருக்கிறார். இந்த பெண்ணின் வீடியோ, இணையத்தில் சில மணி நேரங்களிலேயே வைரலானது. இந்த பெண்ணின் செயலை பார்த்து அதிர்ந்து போன நெட்டிசன்கள், அவரது செயலை கண்டிக்கவும் செய்தனர்.

வீடியோவில் கூறியிருக்கும் விஷயம்..

அந்த பெண், அதில் “காலையில் வரும் முதல் சிறுநீரை இதற்கு பயன்படுத்த வேண்டும்” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சிறுநீரில்தான் பெரிதாக நிற மாற்றம், நாற்றம் மற்றும் சுவை உள்ளிட்டவை இருக்காது என்றும் கூறியிருக்கிறார்.

இரு கப்பில் சிறுநீரை ஊற்றி, உங்கள் கண்களை அதற்கு மேல் வைத்து கண் சிமிட்டுமாறு கூறுகிறார். மேலும் கண்களை அந்த நீரில் சுழல விட வேண்டும் என்றும் உங்கள் கண்களின் அனைத்து பக்கங்களிலும் சிறுநீர் படும் வகையில் சுழற்ற வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். பிறகு ஒரு டவலால் கண்களை துடைத்து கைகளால் மசாஜ் செய்யுமாறு கூறுகிறார். 

மருத்துவர்கள் சொல்வது என்ன?

இந்த பெண் செய்தது போல பல வித pseudoscience எனப்படும் போலி அறிவியலை பிரச்சாரம் செய்பவர்களும், அது குறித்த வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக இருக்கின்றன. இதையடுத்து, கல்லீரல் மருத்துவ நிபுணர் சைராக் ஏபி ஃபிலிப்ஸ் என்பவர் சிறுநீரை வைத்து கண்கள கழுவுவது குறித்து இணையத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் “உங்கள் சிறுநீரை கண்களில் ஊற்ற வேண்டாம். சிறுநீர் மலட்டு தன்ம உடையது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் கூலாக இருக்க முயற்சிக்கும் பூமர் ஆண்டிக்கள் இப்படி எதையாவது செய்து மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் இதை பார்த்தால் பயமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இன்னும் சில மருத்துவர்களும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதனால் கண் எரிச்சல், கண் சிவத்தலுக்கு தீர்வு கிடைக்காது என்றும் தயவு செய்து யாரும் இதனை பின்பற்ற வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | “என்னை தொட்டா வெட்டிடுவேன்” முதலிரவில் கணவனை மிரட்டிய மனைவி! அதிர வைக்கும் சம்பவம்..

மேலும் படிக்க | வந்தே பாரத் ரயிலுக்குள் கொட்டிய அருவி! - பயணிகளுக்கு சிரமம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News