)
Video Man Dies Middle Of Dance Onam Festival : மனிதர்களுக்கு இறப்பு எப்போது வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. நன்றாக சிரித்து பேசிக்கொண்டிருந்த நபர், திடீரென சரிந்து கீழே விழுந்து இறப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதே போன்ற சம்பவம் ஒன்று தற்போது கேரளாவில் நடந்திருக்கிறது.இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
கேரளாவில், பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று ஓணம். இந்த பண்டிகையில் மலையாளிகளின் முக்கிய அடையாளமாக கருதப்படும் செண்ட மேளம், பாரம்பரிய நடனம் உள்ளிட்ட பல இடம் பெற்றிருக்கும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அந்த நாளில் விடுமுறை என்பதால், முந்தைய நாளில் பண்டிகையை கொண்டாடுவர். அப்படிப்பட்ட கொண்டாட்டின் போதுதான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவின் சட்டமன்றம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் பெண்கள்-ஆண்கள் என பலர் கலந்து கொண்டனர். ஒரு மலையாள பாடலுக்கு, சில சேர்ந்து மேடையில் நடனமாடி கொண்டிருந்தனர். நடுவில், கருப்பு கண்ணாடி அணிந்த நபர், ஸ்டைலாக வேட்டி சட்டை அணிந்து கொண்டு ஆடிக்கொண்டு இருந்தார். இடையில் சற்று தடுமாறிய அவர், சிறிது வினாடிகளில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
A 45-year-old man collapsed and died while dancing on stage during the Onam celebrations organised by the Kerala legislative assembly.
— Vani Mehrotra (@vani_mehrotra) September 2, 2025
The deceased was identified as Junais, an assistant librarian who earlier worked as the personal assistant of former MLA PV Anwar.
He was… pic.twitter.com/dky9R6XPRP
இவருக்கு அருகில் ஆடிக்கொண்டிருந்தவர்கள், முதலில் நடனத்தை விட்டுவிடக்கூடாது என்று ஆடிக்கொண்டு இருந்தனர். ஆனால், அந்த நபர் எழுந்து கொள்ளாததால் அனைவரும் அருகில் சென்று பார்த்தனர். அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.
யார் இவர்?
உயிரிழந்த இந்த நபரின் பெயர், ஜுனைஸ். இவர், லைப்ரரியில் உதவியாளராக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் முன்னாள் எம்.எல்.ஏ அன்வரிடம் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். இவருக்கு 45 வயதாகிறது. இவருக்கு சொந்த ஊர், கேரளாவின் வயநாடு என்று கூற்றப்படுகிறது. இவரது உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.
வேறு ஒரு சம்பவம்:
இதே போல, சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு சம்பவமும் நடந்தது. மத்திய பிரதேசத்தில் 23 வயது பெண் ஒருவர் மேடையில் நடனமாடி கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.தொடர்ந்து கடந்த ஏப்ரல் மே மாதங்களிலும் இதே போன்ற சம்பவம் நடந்திருக்கிறது. இப்படி தொடர்ந்து சில பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இருப்பினும், இதற்கான காரணம் மர்மமானதாகவே இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ