போர் நிறுத்தம் தற்காலிகமானதுதான்.. பிரதமர் மோடி ட்விஸ்ட்!

PM Narendra Modi Speech: இந்தியா - பாகிஸ்தான் போர் தற்காலிகமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : May 12, 2025, 08:53 PM IST
  • இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பிரதமர் மோடி
  • ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு முதல்முறையாக மக்களிடம் பேச்சு
போர் நிறுத்தம் தற்காலிகமானதுதான்.. பிரதமர் மோடி ட்விஸ்ட்!

பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்த நிலையில், இன்று (மே 12) பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இந்தியாவின் பதிலடி நியாமனாது என கூறிய அவர் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை இந்திய நாட்டின் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார். 

Add Zee News as a Preferred Source

பிரதமர் மோடி பேசியதாவது, பஹல்காம் தாக்குதல் மிகுந்த மனவலியை கொடுத்தது. இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியமானது. இந்தியாவின் ஒவ்வொரு பெண்களுக்கும் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நான் சமர்ப்பிக்கிறேன். தீவிரவாதிகளின் பல்கலைக்கழகமாக உள்ள பகவல்பூர் முர்திகி உள்ளிட்டவை கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள் உலக அளவிலான தீவிரவாதிகளுக்கு முக்கிய மையமாகத் திகழ்ந்தது. 

பாகிஸ்தான் நமது எல்லையை தாக்கியது, நாம் அவர்களின் இதயத்தை தாக்கினோம். போரை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது. போர் நிறுத்தம் என்பது தற்காலிகமான ஒன்றுதான். அவர்களை நாம் கண்காணிப்போம். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அரசும், எதிரக்கும் அரசும் ஒன்றாக உறவாட முடியாது. அணுகுண்டு ஆயுதத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை மிரட்டும் வேலைகளில் யாரும் ஈடுபடாதீர்கள். அணுகுண்டு ஆயுதத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை மிரட்டும் வேலைகளில் யாரும் ஈடுபடாதீர்கள் என பேசினார்.

மேலும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன் - டிரம்ப் போட்ட குண்டு!

மேலும் படிங்க: விராட் கோலி என்னுடைய ஃபேவரைட்.. ராணுவத்துடன் கிரிக்கெட்டை ஒப்பிட்ட ஜெனரல் (DGMO)

 

 

About the Author

Trending News