2014 ஆம் ஆண்டு முதன்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி
அவர் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் வாரணாசி தொகுதியில் போட்டியிட அவரை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சி போட்டியிட்டது.
ஆம்ஆத்மி கட்சியின் வேட்பாளராக இப்போது டெல்லி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக களமிறங்கினார்.
அவர் சுமார் 2 லட்சம் வாக்குகள் பெற்ற நிலையில் பிரதமர் மோடி 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அப்போது முதல் பிரதமர் மோடி தீவிரமாக எதிர்த்து கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது டெல்லியில் சிறையில் உள்ளார்.
டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
சிறையில் இருந்தவாறே முதலமைச்சராக தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அவர் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியா முழுவதும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.