சோனியா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

';


சோனியா காந்தி தாக்கல் செய்துள்ள ராஜ்யசபா தேர்தல் வேட்புமனுவில் தனது சொத்து மதிப்புகளையும் தாக்கல் செய்துள்ளார்.

';


முதல்முறையாக அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு போட்டியிடுகிறார்.

';


தனது உடல்நிலை மற்றும் வயது காரணமாகவே லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

';


அவரது வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட அவரது பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள சொத்து மற்றும் நிதி விவரங்கள் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

';


சோனியா காந்தியிடம் இப்போது ரொக்கமாக ரூ.90,000 உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 12.53 கோடி

';


கடந்த 2014ஆம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 9.28 கோடி, 2019-ல் 11.82 கோடி. இப்போது 2024-ல் அது ரூ.12.53 கோடியாக அதிகரித்துள்ளது.

';


சோனியா காந்தியிடம் இருக்கும் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 6.38 கோடியாக இருக்கிறது.

';


இதில் நகைகள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ராயல்டி, முதலீடுகள், முதலீட்டுப் பத்திரங்கள், வங்கி வைப்புத்தொகை மற்றும் ரொக்கம் ஆகியவை அடக்கம்.

';


குறிப்பாக அவரிடம் உள்ள நகைகளின் மதிப்பு மட்டும் ரூ. 1.07 கோடி. ரூ.49.95 லட்சம் மதிப்பிலான 1.3 கிலோ தங்கம் மற்றும் ரூ.57.2 லட்சம் மதிப்பிலான 88 கிலோ வெள்ளி வைத்திருக்கிறார்.

';


சோனியா காந்திக்கு இத்தாலி நாட்டிலும் பரம்பரை சொத்துக்களில் பங்கு இருக்கிறது. அங்குள்ள இவரது சொத்து மதிப்பு தற்போது ரூ. 26.83 லட்சம்

';

VIEW ALL

Read Next Story