)
Suvendu Adhikari : மேற்கு வங்கத்தின் பாஜக நாயகன் என அழைக்கப்படும் சுவேந்து அதிகாரி, முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக, சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில், இவர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
மேற்கு வங்க தேர்தல் முடிவுகள், கடந்த 4ஆம் தேதி வெளியாகின. இதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்திருந்தது. பாரதிய ஜனதா கட்சி, மொத்தம் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரச், 80 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த மூன்று ஆட்சி காலமாக, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததை அடுத்து, இம்முறை படுதோல்வி அடைந்தது, அனைவருக்கும் அதிர்ச்சியை கிளப்பியது. இதையடுத்து, இந்த தேர்தலில் சூழ்ச்சி நடந்திருப்பதாக கூறிய மம்தா, தான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என மறுத்தார். “மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை. எங்கள் வெற்றி திருடப்பட்டு விட்டது. முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்” என்று அவர் இது குறித்து பேசுகையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியே சட்டமன்ற மே 7ஆம் தேதி கலைக்கப்படுவதாக அறிவித்தார்.
மே 9ஆம் தேதியான நாளை, பாஜக தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இந்த பதவியேற்பு விழாவில், பாஜகவின் முக்கிய தலைவர்களான மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவேந்து அதிகாரிதான் மேற்கு வங்கத்தின் துணை முதல்வர் என்று முன்னரே தகவல் வெளியானது. இதையடுத்து, இன்று நடைப்பெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சி தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரே, முதல்வராகவும் பொறுப்பேற்கிறார். இவர், பவானிபூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தார்.
பிற முக்கிய பொறுப்புகள் யாருக்கு?
அக்னி மித்ரா பால் எனும் பாஜகவின் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மேற்கு வங்கத்தில் முதல் பெண் துணை முதல்வராக பொறுப்பேறார் என கூறப்படுகிறது. அதே போல, வடக்கு வங்காளத்தில் இருந்து வந்த ஷங்கர் கோஷ் என்பவருக்கும் துணை முதல்வர் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர் ஆவார். 2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத்தேர்தலில், மம்தாவை இவர் பவானிபூர் தொகுதியில் தோற்கடித்து, தற்போது புதிய முதலமைச்சராக பதவியில் அமரப்போகிறார்.
நீண்ட காலமாக, மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், டிசம்பர் 2020ல் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.
மம்தாவின் விஸ்வாசியான இவர், 2021 மற்றும் 2026 ஆகிய இரு தேர்தல்களிலும், பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சுவேந்து அதிகாரியின் உதவியாளர், சமிபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவேந்து அதிகாரியின், நேர்முக உதவியாளரான சந்திநாத் ராத் என்கிற 42 வயது நபர், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தின் மத்தியகிராம் பகுதியில், காரில் வீடு திரும்பிய போது, அவரை பின் தொடர்ந்த நபர்கள், அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவருக்கு தலை, மார்பு, வயிற்று பகுதிகளில் குண்டு பாய்ந்தது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்த வழக்கு இன்னும் விசாரணை நடந்து வருகிறது.
திருமணம் ஆகாத முதலமைச்சர்!
இதற்கு முன்பு, மேற்கு வங்கத்தை ஆண்ட மம்தா பானர்ஜிக்கு திருமணம் ஆகவில்லை. தற்போது புதிய முதலமைச்சராக சுவேந்து அதிகாரியும் திருமணம் ஆகாதவராக இருக்கிறார்.
இவரது அரசியல் பயணமானது 1987ல் தொடங்கியது. மாணவர் அணியில் இருந்த இவர் பின்பு முழுமையாக தன்னை இதற்கு அர்பணித்துக்கொண்டார்.
இதுவரை மேற்கு வங்கத்தை ஆண்ட முதலமைச்சர் 5 பேருக்கு திருமணம் ஆனதில்லை. பிதான் சந்திர ராய், பிரஃபுல்ல சந்திர சென், அஜய் முகர்ஜி, மம்தா பானர்ஜி என யாருக்கும் திருமணம் ஆனதில்லை என கூறப்படுகிறது.