What Happened Kerala Bus Reels Case: கேரளாவையே உலுக்கிய "பஸ் ரீல்ஸ்" விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, தலைமறைவாக இருந்த பெண் யூடியூபர் ஷிம்ஜிதா முஸ்தபா தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஆணின் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படும் இந்தச் சம்பவம், தற்போது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. கேரளாவை உலுக்கிய பேருந்து ரீல்ஸ் விவகாரம் குறித்து இதுவரை நடந்தது என்ன மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை பார்ப்போம்.
யூடியூபர் ஷிம்ஜிதா கைது!
கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் (41) என்பவர், சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட ஒரு வீடியோவால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாகக் கூறி, யூடியூபர் ஷிம்ஜிதா முஸ்தபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 16 முதல் இன்று வரை நடந்தது என்ன?
ஜனவரி 16: கோழிக்கோட்டில் இருந்து கண்ணூருக்குத் தனியார் பேருந்தில் தீபக் பயணம் செய்தபோது, அதே பேருந்தில் பயணித்த ஷிம்ஜிதா, தீபக் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, தீபக் கடும் விமர்சனங்களுக்கும் அவமானத்திற்கும் உள்ளானார்.
ஜனவரி 18: மனமுடைந்த தீபக் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
ஜனவரி 21: தலைமைரவான யூடியூபர் ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டார்
மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை
இந்த விவகாரம் கேரளாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வடக்கு மண்டல டிஐஜி-க்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
தலைமைரவான யூடியூபர் ஷிம்ஜிதா
தீபக்கின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஷிம்ஜிதா மீது ஐபிசி பிரிவு 108 (தற்கொலைக்கு தூண்டுதல்) கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஷிம்ஜிதா தனது செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவானார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதைத் தடுக்க காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இருந்த கேரளா காவல்துறை, இறுதியாக வடகரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை, மப்டியில் சென்ற பெண் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளபப்ட்டது.
பேருந்து சிசிடிவி (CCTV) காட்சிகள்
காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பேருந்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பல உண்மைகள் வெளிவந்துள்ளன. பேருந்து ஊழியர்கள் மற்றும் நடத்துனர் அளித்த வாக்குமூலத்தில், அன்று பேருந்தில் எந்தவிதமான வாக்குவாதமோ அல்லது அசாதாரணச் சம்பவமோ நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும் தான் பயணம் செய்த பேருந்திற்குள், மற்ற யாரிடமும் ஷிம்ஜிதா எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், தீபக் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மைத்தன்மை குறைவாக இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் எழுந்த "ஆண்கள் பாதுகாப்பு" விவாதம்
இந்தச் சம்பவம் இணையதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. பேருந்துகளில் ஆண்கள் பாதுகாப்புக்காக உடலில் கேமராக்களை கட்டிக்கொண்டு செல்வது போன்றும், பெண்கள் அருகே அமர பயந்து ஓடுவது போன்றும் பல மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதேநேரம் "நாங்களும் வீடியோ எடுப்போம்" என ஆண்கள் கிண்டலாகப் பேசும் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் தீபக் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபர் ஷிம்ஜிதா கைது: அடுத்தது என்ன?
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஷிம்ஜிதாவின் டிஜிட்டல் சாதனங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரத்தில், "ஒருவர் இறந்துவிட்டார் என்பதாலேயே அவர் குற்றமற்றவர் என்று முடிவு செய்துவிட முடியாது, முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்" என்ற கருத்தையும் ஒரு தரப்பினர் முன்வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க - பஸ்ஸில் உரசியதாக வீடியோ! தீபக் வழக்கில் திடீர் திருப்பம்…என்ன நடந்தது?
மேலும் படிக்க - டாப் 10 அரசியல் தலைவர்கள்! மோடி-அமித்ஷா-வை முந்திய விஜய்-எந்த இடம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









