பீகாரில் எங்கே தவறு நடந்தது, கொரோனாவின் வேகம் ஏன் திடீரென்று அதிகரித்தது? உண்மை என்ன?

பீகாரில் கொரோனா புள்ளிவிவரங்கள் மிக வேகமாக அதிகரித்துள்ளன. சமீபத்திய தரவு கடந்த 30 நாட்களை விட மிக வேகமாக பரவி உள்ளது. ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 24 வரை அதாவது வெறும் 4 நாட்களில் 81 கொரோனா நேர்மறைகள் வெளிவந்தன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 24, 2020, 04:56 PM IST
  • பீகாரில் 4 நாட்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தன.
  • மாநிலத்தில் 4 நாட்களில் 81 கொரோனா நேர்மறைகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
  • அதேசமயம் ஏப்ரல் 19 வரை கடந்த 30 நாட்களில் வெறும் 96 நேர்மறைகள் கண்டறியப்பட்டன.
பீகாரில் எங்கே தவறு நடந்தது, கொரோனாவின் வேகம் ஏன் திடீரென்று அதிகரித்தது? உண்மை என்ன? title=

பட்னா: பீகாரில் கொரோனா புள்ளிவிவரங்கள் மிக வேகமாக அதிகரித்துள்ளன. ஏப்ரல் 20 காலை 96 கோவிட் நேர்மறை பாதிப்பு மாநிலத்தில் இருந்தனர் என்று, ஆனால் ஏப்ரல் 24 பிற்பகலுக்குள் இந்த எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் கொஞ்சம் உற்று நோக்கினால், பீகாரில் கொரோனாவின் முதல் தொற்று பாதிப்பு மார்ச் 22 அன்று கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது, 30 நாட்களில் 96 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் சமீபத்திய தரவு இந்த 30 நாட்களை விட மிக வேகமாக பரவி உள்ளது. ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 24 வரை அதாவது வெறும் 4 நாட்களில் 81 கொரோனா நேர்மறைகள் வெளிவந்தன.

பாட்னா - ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10:54 மணி வரை 7 நோயாளிகள் இருந்தனர். ஏப்ரல் 24 மதியம், இந்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. மூன்று மடங்கு அதிகரிப்பு. அனைத்து மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது பீகார் தலைநகரில் கொரோனா நேர்மறை சதவீதம் அதிகரித்துள்ளது.

நாலந்தா - ஏப்ரல் 20 காலை வரை, நாலந்தாவில் 11 கொரோனா நேர்மறைகள் இருந்தன. ஆனால் ஏப்ரல் 24 மதியம் வாக்கில் இந்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. அதாவது, 4 நாட்களில், நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

முங்கர் - பீகாரில் கொரோனா முதன்முதலில் நுழைந்த மாவட்டம் இது. இந்த மாவட்டத்தில் தான் முதல் மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10:54 மணி நிலவரப்படி, இங்கு 20 கோவிட் நேர்மறைகள் இருந்தன. ஆனால் ஏப்ரல் 24 மதியம், இந்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது, அதாவது இருமடங்கு அளவில் உயன்ர்துள்ளது. 

கைமூர் - ஏப்ரல் 19 காலை வரை கொரோனா தொற்று பரவாத மாநிலமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் 23 மாலை, 8 கொரோனா நேர்மறைகள் இங்கு ஒரேநாளில் உறுதி செய்யப்பட்டது. 

பக்ஸர்,  ரோஹ்தாஸ் பாங்கா கிழக்கு சம்பரன் மற்றும் பாகல்பூர்  போன்ற மாவட்டங்களிலும் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இது அந்த மாநிலத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, நோயாளிகள் விரைவாக அதிகரிப்பதற்கான காரணம் ஒரு நபர் மட்டுமே. இவற்றின் காரணமாக, அவர்களுடன் தொடர்பு கொள்ளும் நபர்கள் அல்லது அருகிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை முறையாகப் பின்பற்றுவதும், பயண வரலாறு அல்லது கொரோனாவின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு தெரிவிப்பதும் மாநிலத்தில் மேலும் கொரோனா பரவுவதை தடுக்க ஒரே வழி என்று சுகாதாரத் துறை கூறுகிறது.

கொரோனாவுடனான சண்டைக்கு சமூக தொலைவு, தனிமை மற்றும் முகமூடி மிக முக்கியமான ஆயுதங்கள் ஆகும். பீகாரில் சோதனை வசதியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று பட்னாவை சேர்ந்த டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் ஊரடங்கு உத்தரவை மிகவும் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டியது அவசியம் என்று மருத்துவர் கூறுகிறார். இரண்டு பேருக்கு மேல் சாலையில் பார்க்கக்கூடாது. அப்படியிருந்தும், இரண்டு பேருக்கு மேல் ஒன்றாக நடக்க அனுமதிக்கக்கூடாது.

Trending News