Who is the Next Bihar CM?: பீகார் மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். முதல் முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் அரியணையில் அமரப்போகும் சூழலில், டெல்லி மேலிடம் எடுத்துள்ள முடிவுகள் மற்றும் முதல்வர் ரேஸில் உள்ள முக்கிய நபர்கள் யார்? விரிவான அலசல்

பாட்னா செய்திகள்: பீகார் புதிய முதல்வர் (Bihar New CM), "பாஜக" (BJP), நிதிஷ் குமார் ராஜினாமா (Nitish Kumar Resign) என பீகார் அரசியலில் அனல் பறக்கிறது. ஏப்ரல் 15-ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், "அடுத்த முதல்வர் யார்?" என்ற கேள்விதான் பாட்னா முதல் டெல்லி வரை ஓங்கி ஒலிக்கிறது. நிதீஷ் குமார் காலத்திற்குப் பிறகு, முதன்முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பீகாரின் அரியணையில் அமரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், இந்த முறை ஆட்டம் ரொம்பவே சீரியஸாக இருக்கிறது. பாஜகவின் புதிய அத்தியாயம் தொடங்குவதை முன்னிட்டு, மாநிலத்தின் அடுத்த பாஜக முதலமைச்சர் யார்? என்பது நாளை (ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை) தெரியவரும்.
பீகார் மாநில அரசியலில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தலைமை மாற்றம் நாளை அரங்கேறுகிறது. மாநிலத்தின் முதல் பாஜக முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள, மத்திய அமைச்சரும் பாஜக மேலிடப் பார்வையாளருமான சிவராஜ் சிங் சவுகான் நாளை பாட்னா வருகை தருகிறார்.
அதாவது பாஜக தலைமை சும்மா இருக்கவில்லை. மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானை 'மத்திய பார்வையாளராக' களமிறக்கியுள்ளது. கோஷ்டி பூசல்களைத் தீர்ப்பதில் கில்லாடியான சிவராஜ், 14-ஆம் தேதி பீகார் செல்கிறார். 15-ஆம் தேதி காலை சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்கி, ஒரு பெயரை டிக் அடிப்பதுதான் இவருடைய வேலை. இவரை நியமித்த உடனேயே துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி வாழ்த்து தெரிவித்திருப்பது, கட்சிக்குள் ஏதோ ஒரு பெரிய மூவ் நடப்பதைக் காட்டுகிறது.
பீகாரின் நீண்டகால முதலமைச்சராகப் பணியாற்றிய ஐக்கிய ஜனதா தளம் (JD-U) தலைவர் நிதிஷ் குமார், நாளை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். 75 வயதாகும் அவர், கடந்த வாரம் மாநிலங்களவை எம்.பி-யாகப் பொறுப்பேற்றார். நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இறுதி அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, அவர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"சிவராஜ் சிங் சவுகான் நாளை பாட்னா வருகிறார். அவரது முன்னிலையில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் தங்களது தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்," என பீகார் பாஜக தலைவர் சஞ்சய் சாரோகி தெரிவித்துள்ளார்.
|
நிகழ்வு |
விவரம் |
|
பதவியேற்பு விழா |
ஏப்ரல் 15, மாலை 4:00 மணி |
| இடம் | ராஜ்பவன், பாட்னா |
| மத்திய பார்வையாளர் | சிவராஜ் சிங் சௌஹான் |
| முக்கிய எதிர்பார்ப்பு | முதல் பாஜக முதலமைச்சர் |
| நிதிஷ் குமார் ராஜினாமா | ஏப்ரல் 14, 2026 |
பாஜக முகாமில் பல பெயர்கள் அடிபட்டாலும், தனது சமூக சமன்பாடுகளைக் கணக்கில் கொண்டு, குறிப்பாக OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) அல்லது தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராகத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
சாம்ராட் சவுத்ரி: தற்போது துணை முதலமைச்சராக இருக்கும் சாம்ராட் சவுத்ரி, முதலமைச்சர் ரேஸில் இருக்கும் ஒரு வலுவான முதல்வர் வேட்பாளராக இருக்கிறார். ஆனால் இவர் நீண்ட காலம் ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யு கட்சிகளில் இருந்துவிட்டு பாஜகவுக்கு வந்தவர் என்பது இவருக்கு எதிரான ஒரு விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் அவர், ஒரு விசுவாசமான கட்சித் தொண்டனாகத் தன்னை முன்னிறுத்துகிறார்.
நித்யானந்த் ராய்: மத்திய உள்துறை இணை அமைச்சரான நித்யானந்த் ராய், ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர். கட்சிக்கு விசுவாசமானவர் என்பதால் இவரது பெயரும் பலமாகப் பரிசீலிக்கப்படுகிறது.
விஜய் குமார் சின்ஹா: இவரும் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்.
நிதிஷ் குமாரின் ஒரே மகனான நிஷாந்த் (44) கடந்த மாதம் தான் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். அவர் புதிய அமைச்சரவையில் துணை முதலமைச்சராகப் பதவியேற்கக்கூடும் என ஒரு தரப்பு கூறினாலும், அவர் முதலில் அனுபவம் பெற வேண்டும் என்பதே நிதிஷ் குமாரின் விருப்பமாக இருப்பதாகத் தெரிகிறது.
243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில், ஆளும் என்.டி.ஏ (NDA) கூட்டணிக்கு 202 இடங்கள் உள்ளன. இதில் பாஜக 89 இடங்களுடன் பெரிய கட்சியாக உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் (JD-U) 85 இடங்களைப் பெற்றுள்ளது.
புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழா ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறலாம் என்றும், இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தி பேசும் மாநிலங்களில் இதுவரை பாஜக முதலமைச்சர் இல்லாத ஒரே மாநிலமான பீகாரிலும், முதல் முறையாக பாஜக தனது ஆட்சியைத் தனி முத்திரையுடன் தொடங்குகிறது.
இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் சும்மா இருப்பாரா? "யார் முதல்வரானால் நமக்கு என்ன? எல்லாம் டெல்லியில் இருக்கும் அந்த இரண்டு பேர் எடுக்கும் முடிவுதான். இது மக்கள் ஆணை கிடையாது, ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி" என செம்மையாகக் கிண்டல் செய்துள்ளார்.
தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என தலைவர்கள் பவ்யம் காட்டினாலும், உள்ளுக்குள் யாருடைய அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்ற படபடப்பு எல்லோரிடமும் இருக்கிறது. இன்னும் 48 மணி நேரத்தில் பீகாரின் புதிய 'முதல்வர்' யார் என்பது தெரிந்துவிடும். ஏப்ரல் 15 பீகார் அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
பீகாரின் புதிய முதலமைச்சர் யார் என்பது ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெறும் பாஜக சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தற்போது சாம்ராட் சவுத்ரி மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.
நிதிஷ் குமார் சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி-யாகப் பொறுப்பேற்றார். மேலும், பீகாரில் பாஜக தனது முதல் முதலமைச்சரை அரியணையில் அமர்த்த விரும்புவதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
பீகாரின் புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை ஏப்ரல் 15, 2026 அன்று மாலை 4:00 மணியளவில் பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்க உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ