)
Who Is Shivangi Singh: ஹரியானா மாநிலத்தின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் மேற்கொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலையில் அங்கு வருகை தந்தார். தொடர்ந்து, ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற புகழை திரௌபதி முர்மு அடைந்தார். இந்திய விமானப்படை தளபதி ஏ.பி. சிங்கும் அதே விமானப்படை தளத்தில் இருந்து மற்றொரு போர் விமானத்தில் பயணித்தார்.
இதற்கு முன், கடந்த 2023ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தின் டெஸ்பூர் விமானப்படை தளத்தில் இறுந்து சுகோய்-30 MKI போர் விமானத்தில் திரௌபதி முர்மு பயணம் மேற்கொண்டார். அதன்படி 2 போர் விமானங்களில் பயணித்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் திரௌபதி முர்மு பெற்றுள்ளார். இது ஒருபுறம் இருக்க, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வெளியிட்ட புகைப்படம் ஒன்றின் மூலம் பாகிஸ்தானின் மற்றொரு பொய்யும் தற்போது பொதுவெளியில் அம்பலமாகி உள்ளது. பாகிஸ்தானின் பொய் எப்படி அம்பலமானது என்பதை பார்க்கும் முன் பாகிஸ்தான் சொல்லிய பொய் என்ன என்பதை முதலில் காணலாம்.
"The sortie on Rafale is an unforgettable experience for me. This first flight on the potent Rafale aircraft has instilled in me a renewed sense of pride in the nation's defence capabilities. I congratulate the Indian Air Force and the entire team of Air Force Station, Ambala for… pic.twitter.com/Ud3LX8uqBU
— President of India (@rashtrapatibhvn) October 29, 2025
போர் விமானி சிவாங்கி சிங்கை தாங்கள் பிடித்துவிட்டதாகவும், ஆப்ரேஷன் சிந்தூரில் அவர் இயக்கிய போர் விமானம் வீழ்த்தப்பட்டதில் பாகிஸ்தானில் சிவாங்கி போர் கைதியாக இருக்கிறார் என்றும் பல்வேறு பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன, பாகிஸ்தான் சார்ந்த சமூக வலைதளங்களிலும் பதிவுகள் வெளியாகின. ஆனால் இது பொய் என பல இந்திய தரப்பில் என கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அது பொதுவெளியில் ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன், அம்பாலா விமானப்படை தளத்தில் கம்பீரமாக, முகத்தில் பெரும் சிரிப்புடன் போர் விமானி சிவாங்கி சிங் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் பாகிஸ்தானின் பொய் பரப்புரைக்கு சமட்டி அடியாக விழுந்துள்ளது. மேலும், ரஃபேல் விமானம் குறித்து திரௌபதி முர்முவுக்கு, சிவாங்கி சிங் விளக்கம் அளித்தார்.
President Droupadi Murmu took a sortie in a Rafale aircraft at Air Force Station, Ambala, Haryana. She is the first President of India to take sortie in two fighter aircrafts of the Indian Air Force. Earlier, she took a sortie in Sukhoi 30 MKI in 2023. pic.twitter.com/Rvj1ebaCou
— President of India (@rashtrapatibhvn) October 29, 2025
சிவாங்கி சிங், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ளார். புதுடெல்லியில் உள்ள விமானப்படை அருங்காட்சியகத்திற்கு சிறுவயதில் சென்ற பிறகு விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆர்வம் சிவாங்கிக்கு ஏற்பட்டுள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், NCC விமானப் பிரிவில் பணியாற்றினார், இது இந்திய விமானப்படையில் இணைவதற்கு அவருக்கு உதவிக்கரமாக இருந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் இணைந்துள்ளார். 2017ஆம் ஆண்டு இரண்டாவது பெண் போர் விமானிகளின் ஒரு பகுதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் கடுமையாகப் பயிற்சி பெற்றார்.
ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் (AFA) பயிற்சி பெற்றார். அங்கு கடுமையாக பயிற்சி மேற்கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டாவது பெண் போர் விமானியாக இந்திய விமானப்படையால் நியமிக்கப்பட்டார். சிவாங்கி சிங் தனது விமானப் பயணத்தை MiG-21 பைசன் என்ற சிக்கலான அதிவேக விமானத்தில் இருந்து தொடங்கினார். பின்னர் 2020ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் ரஃபேல் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டு, ரஃபேல் விமானத்தை இயக்கிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை சிவாங்கி சிங் பெற்றார்.
தற்போது சிவாங்கி அம்பாலாவில் உள்ள 17வது படைப்பிரிவான "கோல்டன் ஆரோஸ்" உடன் பணியமர்த்தப்பட்டுள்ளார். சர்வதேச போர் பயிற்சிகளில் பலமுறை இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். மேலும், கிழக்கு லடாக் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளிட்ட முக்கிய எல்லை மண்டலங்களில் சிவாங்கி சிங் செயல்பாட்டு விமானங்களை இயக்கி உள்ளார்.
கடந்த மே மாதம் ஜம்மு காஷ்மீரின் பகல்காமில், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.
இந்த நடவடிக்கையின்போது தான், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா புதிதாக பெற்ற ரஃபேல் போர் விமானம் உள்பட 6 இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் பொய் பரப்புரை செய்தது. ஆனால், இந்திய அரசும், இந்திய ராணுவமும் பாகிஸ்தான் தங்களது ஒரு போர் விமானத்தை கூட சுட்டு வீழ்த்தவில்லை என தரவு மற்றும் வீடியோ ஆதாரத்துடன் எடுத்துக்கூறியது. அதேநேரத்தில், பாகிஸ்தான் இந்தியாவின் தாக்குதலில் 6 போர் விமானங்களை இழந்ததாகவும் விளக்கியது. குறிப்பாக, அமெரிக்க தயாரிப்பான F-16 போர் விமானம் நான்கும் மற்றும் சீனாவின் JF-1 போர் விமானமும் வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி ஏ.பி. சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ