)
இந்தியாவின் சமையல் உலகம் என்பது வெறும் சுவைகளை பற்றியது மட்டுமல்ல, அது மிகப்பெரிய சாம்ராஜ்யங்களையும் உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் உலகத்தரம் வாய்ந்த உணவகங்கள் வரை, பல சமையல் கலைஞர்கள் தங்களின் திறமையை பன்னாட்டு வணிகமாக மாற்றியுள்ளனர். தமிழ், ஹிந்தி என பிரபல மொழிகளில் சமையல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதனால் தான் ஒவ்வொரு சேனலிலும் சமையல் தொடர்பாக புது புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில், இந்தியாவின் நம்பர் 1 பணக்கார சமையல் கலைஞர் என்ற பெருமையை சஞ்சீவ் கபூர் பெற்றுள்ளார்.

இந்திய சமையல் உலகில் சஞ்சீவ் கபூர் ஒரு தனிப்பெரும் நிறுவனம் என்றே கூறலாம். 1990களில் 'கானா கஜானா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் இந்திய இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானார். ஆசியாவிலேயே நீண்ட காலம் (17 ஆண்டுகள்) ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி என்ற பெருமையும் இதற்கு உண்டு. தொலைக்காட்சி புகழ் மட்டுமின்றி, 'யெல்லோ சில்லி' என்ற பெயரில் உணவகங்கள், 150-க்கும் மேற்பட்ட சமையல் புத்தகங்கள், சமையலறை உபகரணங்கள் என தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளார். இவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு சுமார் 1165 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விகாஸ் கண்ணா
அமிர்தசரஸிலிருந்து நியூயார்க் வரை பயணித்து, பல்வேறு விருது வென்றவர். இவர் ஒரு சமையல் கலைஞர் மட்டுமல்லாமல், திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் என பன்முக திறமை கொண்டவர். இவரது சொத்து மதிப்பு சுமார் 84 முதல் 127 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கரிமா அரோரா
Michelin Star விருது வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தவர். பாங்காக்கில் உள்ள இவரது 'கா' என்ற உணவகம், இந்திய மற்றும் தாய்லாந்து உணவு வகைகளின் புதுமையான கலவைக்காக சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. இவர் இரண்டு 'Michelin Star' விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொத்து மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய் ஆகும்.
ரன்வீர் பிரார்
'மாஸ்டர் செஃப் இந்தியா' நிகழ்ச்சியின் நடுவராக புகழ்பெற்ற இவர், தனது 17 வயதில் லக்னோவில் கபாப் பயிற்சி பெற்றவர். பாரம்பரிய சமையல் நுட்பங்களை நவீன கதைகளுடன் கலந்து வழங்குவதில் வல்லவர். இவரது மாத வருமானம் சுமார் 45 லட்சம் ரூபாய் என்றும், நிகர சொத்து மதிப்பு 41 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
குனால் கபூர்
'மாஸ்டர் செஃப் இந்தியா' நிகழ்ச்சியின் மற்றொரு பிரபலமான நடுவர். இந்திய உணவுகளுக்கு புத்துயிர் அளிப்பதில் பெயர் பெற்றவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மற்றும் உணவகங்கள் மூலம் இவரது சொத்து மதிப்பு 8.71 கோடியிலிருந்து 43.57 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
மற்ற மாநிலங்களில் சமையல்துறையில் அசத்தி வருபவர்களை போலவே தமிழ்நாட்டில் அசத்தி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஒரு விழாவில் மாதம்பட்டி ரங்கராஜ் சமைக்கிறார் என்றாலே அது பெரிய விழா என்று கருதப்படும். 2024 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, மாதம்பட்டி ரங்கராஜின் நிகர மதிப்பு சுமார் தோராயமாக ரூ. 33 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது முதன்மை வருமானம் கேட்டரிங் மூலம் வருகிறது. மேலும் மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலமும், டிவி நிகழ்ச்சிகள் மூலமும் அவர் ஒரு நடிகராகவும் வருமானம் ஈட்டுகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ