)
Karnataka Congress Crisis Latest Updates: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் பதவி பங்கீடு குறித்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையிலான அதிகாரப் போட்டி குறித்த முக்கியத் தகவல்கள் குறித்து பார்ப்போம்.
2.5 ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்தது: காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை வகிக்க வேண்டும் என்று பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்றுடன் முதல் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
டெல்லியில் எம்.எல்.ஏ-க்கள்: டி.கே.சிவகுமாரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சுமார் 15 பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மேலிடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
திட்டங்களும் வரவேற்பும்: கடந்த இரண்டரை ஆண்டுகளில், தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், வீடுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
சித்தராமையாவின் அதிரடி: "அடுத்த பட்ஜெட்டையும் நானே தாக்கல் செய்வேன்; முதல்வர் மாற்றம் குறித்துத் தகவல் இல்லை" என்று சித்தராமையா உறுதியாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
டி.கே.சிவகுமாரின் பதில்: "கட்சியில் எந்தப் பாகுபாடும் இல்லை, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், சித்தராமையாவே முதல்வராகத் தொடர்வார்" என்று டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறினாலும், அவரது வீட்டில் நடந்த ஆதரவாளர்கள் சந்திப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே வருகை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரு (Congress President Mallikarjun Kharge's Bengaluru visit) வரவுள்ள நிலையில், அவரைச் சந்திக்கவிருப்பதாகச் சித்தராமையா கூறியுள்ளார். இந்தச் சந்திப்பு அடுத்தக்கட்ட அரசியலைத் தீர்மானிக்கும்.
அடுத்த முதல்வராக (who is the next CM in Karnataka) டி.கே.சிவகுமார் பொறுப்பேற்பாரா அல்லது சித்தராமையாவே ஆட்சியைத் தொடர்வாரா என்பது வரும் நாட்களில் கார்கேவுடனான சந்திப்பு மற்றும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவில் தெரியவரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ