ஜே.பி. நட்டாவுக்கு மாற்று யார்? பாஜகவின் புதிய தேசியத்தலைவர் குறித்து விரைவில் அறிவிப்பு

BJP New National President Soon: பாஜகவின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. தற்போது ஜே.பி. நட்டாவை மாற்றுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 12, 2025, 02:16 PM IST
ஜே.பி. நட்டாவுக்கு மாற்று யார்? பாஜகவின் புதிய தேசியத்தலைவர் குறித்து விரைவில் அறிவிப்பு

Who Will Replace JP Nadda In BJP: ஜூலை மாதம் வரை மாநிலத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நேரம் செலவிடப்படும் என்றும், அதன் பிறகுதான் தேசியத் தலைவர் குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் அரசியலமைப்பின்படி, தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, நாட்டின் குறைந்தது பாதி மாநிலங்களின் மாநிலத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

Add Zee News as a Preferred Source

பாஜகவின் புதிய தலைவர் தேர்தல் எப்பொழுது?

பாஜகவின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. தற்போது ஜே.பி. நட்டாவை மாற்றுவது குறித்து ஆகஸ்ட் மாதத்திற்குள் மட்டுமே முடிவு எடுக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தின் கிட்டத்தட்ட பாதி கடந்துவிட்டது, உ.பி., மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலங்களின் தலைவர்கள் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த மாநிலங்களின் தலைவர்கள் முடிவு செய்யப்பட்ட பின்னரே பாஜக தேசியத் தலைவர் குறித்து முடிவெடுக்கும்.

விரைவில் பாஜகவின் புதிய தலைவர் குறித்து அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவருக்கான காத்திருப்பு நீண்டு கொண்டே செல்கிறது. தற்போதைய தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு மாற்றாக முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. ஜூலை மாத இறுதியில் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதுதான் அது. இதற்கு முன், பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் காவி கட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஜூலை நடுப்பகுதியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு பாஜகவின் புதிய தேசிய கவுன்சில் கூட்டத்தை ஏற்பாடு செய்ய முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில், பாஜகவின் புதிய தலைவர் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்.

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி

தற்போதைய தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்த போதிலும், பல காரணங்களால் கட்சியால் இன்னும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அதிகாரிகள் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆனால் இன்னும் கட்சிக்கு புதிய தலைவர் கிடைக்கவில்லை. 

மறுபுறம் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் பாஜக தேர்தல்களை முடிக்க முடியவில்லை, மேலும் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையும் தொடங்க முடியவில்லை.

புதிய தேசியத் தலைவருக்கான போட்டியில் இருக்கும் முக்கியத் தலைவர்கள்

பாஜகவின் புதிய தேசியத் தலைவருக்கான பல போட்டியாளர்களின் பெயர்கள் முன்வந்துள்ளன. இவர்களில், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், மனோகர் லால் கட்டார் மற்றும் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரின் பெயர்கள் முக்கியமாக விவாதிக்கப்படுகின்றன. பாஜகவின் புதிய தேசியத் தலைவரின் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்பதை காலம்தான் சொல்லும்.

பாஜக தேசியத் தலைவர் யார்?

தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் பாஜக பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஏனென்றால் யாரும் எதிர்பார்க்காத, அதிக பிரபலம் இல்லாத ஒருவரை தான் பாஜக தேர்ந்தெடுத்து வருகிறது. பல மாநிலங்களில் முதல்வர்கள் எதிர்பாராத விதமாக பாரதிய ஜனதா கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - ஹனிமூன் கொலை: நரபலி கொடுக்கப்பட்ட ராஜா ரகுவன்ஷி? வெளியான திடுக்கிடும் பின்னணி

மேலும் படிக்க - அமெரிக்காவில் என்ன நடக்கின்றது? குவிந்த ராணுவம்..! கடும் பதற்றம்..!

மேலும் படிக்க - தலையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு போராட்டம் - மணிப்பூரில் மீண்டும் வன்முறை... ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News