)
பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவனம் இந்திய FMCG சந்தையில் மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஆயுர்வேத மற்றும் இந்திய தயாரிப்புகள் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை தற்போது உருவாக்கியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் ஒரு சிறிய மருந்தகத்தில் தொடங்கிய இந்நிறுவனம் இன்று பெரிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை தந்து வருகிறது. பதஞ்சலி நிறுவனும் இந்திய சந்தையில் வெற்றி பெற்றதுடன், நிறுவத்தின் மீது இந்திய நுகர்வோரின் சிந்தனையையும் மாற்றியுள்ளது.
பதஞ்சலியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, இவை இந்திய மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை முழுமையாக பின்பற்றி வருகிறது. மேலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தனது தயாரிப்புகளை வழங்க பதஞ்சலி திட்டமிட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பதஞ்சலியின் பிசினஸ் மாடல் 'தன்னம்பிக்கை கொண்ட இந்தியா' மற்றும் 'இந்திய தயாரிப்புகள்' ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதனால் பதஞ்சலி இன்று FMCG உலகில் ஒரு பெரிய பெயராக மாறியுள்ளது.
எனினும் தற்போது மக்களின் மனதில் எழும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் பதஞ்சலியின் பிசினஸ் மாடல் எவ்வாறு வெற்றிகரமான 'இந்திய கண்டுபிடிப்புக்கு' எடுத்துக்காட்டாக மாறியது என்பதே?
பதஞ்சலியின் பிசினஸ் மாடல்
பதஞ்சலியின் பிசினஸ் மாடலின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இவை மக்களின் உணர்ச்சிகளையும் தேவைகளையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு குறைந்த விலையில் நல்ல ஆயுர்வேத பொருட்களை வழங்குகிறது. அதுமட்டுமின்றி பதஞ்சலி அதன் விநியோகச் சங்கிலியை மிகவும் எளிமையாக்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை வழங்குவதில் பதஞ்சலி நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. பதஞ்சலியின் பிசினஸ் மாடலின் ஒரு முக்கிய அம்சம் அதன் வலுவான விநியோக வலையமைப்பு ஆகும். அதாவது பதஞ்சலி தயாரிப்புகள் பல வழிகளில் மக்களைச் சென்றடைகின்றன. இதில் அவர்களின் சொந்த பிரத்யேக சில்லறை விற்பனை நிலையங்கள், உரிமையாளர் கடைகள், பொது கடைகள் மற்றும் பெரிய பல்பொருள் அங்காடிகள் அடங்கும். இதன் காரணமாக, பதஞ்சலி நகரங்களுக்கு மட்டுமல்லாமல், கிராமங்களுக்கும் சென்றடைகிறது.
பதஞ்சலி ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆயுர்வேதம் மற்றும் இந்திய பாரம்பரியம் பற்றி பேசுவதால் மக்கள் இந்நிறுவத்தை அதிகம் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை மற்றும் நல்ல நெட்வொர்க் காரணமாக, பதஞ்சலி நிறுவனம் சந்தையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்க முடிந்தது.
பதஞ்சலியின் மார்க்கெட்டிங் முறை:
பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகளை வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மார்க்கெட்டிங் செய்து வருகிறது, மேலும் அதன் விரிவான இந்திய பிரச்சாரத்தின் மூலம் இந்திய நுகர்வோரை ஈர்க்கிறது. இந்த நிறுவனம் தன்னை முற்றிலும் இந்திய பிராண்டாகக் காட்டிக் கொள்கிறது. மேலும் செயற்கை பொருட்கள் இல்லை தனது தயாரிப்புகளை உருவாக்கி வருகிறது.
இந்திய சந்தை இன்னும் கலாச்சார ரீதியாக வேரூன்றிய தயாரிப்புகளை விரும்புகிறது, மேலும் பதஞ்சலி இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இதனுடன், பதஞ்சலியின் பிராண்ட் தூதரும் இணை நிறுவனருமான பாபா ராம்தேவ் நிறுவனத்திற்கு ஒரு வலுவான பிராண்ட் பிம்பத்தை உருவாக்கியுள்ளார்.
நேரடி விநியோக திட்டமிடல் மற்றும் குறைந்த விலையில் பொருட்கள்:
பதஞ்சலியின் பிசினஸ் மாடலின் ஒரு சிறந்த அம்சம் அதன் நேரடி விநியோக திட்டமிடல் ஆகும். இந்தக் கொள்கையின் மூலம் நிறுவனத்திற்கு குறைந்த செலவுடன் வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் பொருட்களை வழங்க உதவுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ