What Is the Operation Sindhu: இஸ்ரேல் ஈரான் போரில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக திப்பி அழைத்து வர இந்திய அரசு ஆபரேஷன் சிந்து மிஷனை தொடங்கியுள்ளது.

Operation Sindhu Latest Updates: ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து 290 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். அவர்கள் டெல்லியில் தரையிறங்கினர். அங்கிருந்து அவரவர் மாநிலங்களுக்கு செல்வார்கள். பெரும்பாலும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 290 இந்திய மாணவர்களை ஏற்றிக்கொண்டு, ஈரானின் மஷாத்திலிருந்து ஒரு விமானம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தொடரும் ஆபரேஷன் சிந்து..
சரி ஆபரேஷன் சிந்து எதற்காக தொடங்கப்பட்டு உள்ளது? ஆபரேஷன் சிந்துவின் பணி என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
இஸ்ரேல்-ஈரான் மோதல்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு நாட்டிலிருந்து தனது நாட்டினரை வெளியேற்ற இந்திய அரசு ஆபரேஷன் சிந்துவைத் தொடங்கியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் வார்
சற்று பின்னோக்கி செல்வோம்.. 2022-ல் திடீரென உக்ரைன், ரஷ்யா வார் ஆரம்பித்தது. நமது நாட்டை சேர்த்த மாணவர்கள் நிறைய பேர் போருக்கு மத்தியில் சிக்கிக்கொண்டனர். 2022 மார்ச் மாதம் ஒரு சிலர் பாகிஸ்தான் தூதரகத்தில் தஞ்சம் அடைஞ்சார்கள். அதன்பிறகு நமது இந்திய மாணவர்களை பத்திரமாக திரும்பி அழைத்து வரப்பட்டார்கள். அப்பொழுது நமது எக்ஸ்டர்னல் அபேர்ஸ் மினிஸ்ட்ரி இந்தியன் ஏர்போர்ட்டில், நாடு திரும்பி வந்த மாணவர்களுக்கு ரோஸ் கொடுத்தார்கள். அந்த ரோஸ் எல்லாம் வாங்கி தூக்கி தூக்கி போட்டுட்டு போனார்கள்.
அதற்கு காரணம் என்ன எனப்பார்த்தால், இந்திய அரசு ஒழுங்காவே எங்களை பார்த்துக் கொள்ளவில்லை. எங்களை சரியான நேரத்தில் ரெஸ்கியூ பண்ணவில்லை எனக் குற்றம்சாட்டினார்கள்.
14000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி உள்ளனர்
ஆனால் இந்த முறை ஆபரேஷன் சிந்து தொடங்கி, சரியாக திட்டமிட்டு இந்திய மாணவர்களை திருப்பி அழைத்து வருகின்றனர். இஸ்ரேல், ஈரான் இடையே பிரச்சனை வெடித்ததால், அங்கே சுமார் 14000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி உள்ளனர் எனக் கூறப்படுகிறது. அதிலும் மெடிக்கல் காலேஜ் இந்திய மாணவர்கள் தான் அதிகம். இதில் 20 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் யார் என்றால், நமது காஷ்மீர் மாணவர்கள் தான்.
ஆபரேஷன் சிந்து எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
இந்தமுறை இந்திய அரசு, உடனடியாக இந்த ஆபரேஷன் சிந்து மூலமாக நிறைய பேர் ரெஸ்க்யூ பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவின் வெளியேற்ற முயற்சிகளை எளிதாக்க ஈரான் தனது வான்வெளியைத் திறந்துள்ளது. மேலும் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் ஆபரேஷன் சிந்துவைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு திரும்பும் சுமார் 1,000 இந்தியர்கள்
துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்திலிருந்து அதிகாலை 3 மணியளவில் ஒரு விமானம் உட்பட, மேலும் இரண்டு விமானங்கள் இரவில் பிற்பகுதியில் வந்து சேர திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் சுமார் 1,000 இந்தியர்கள் வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இந்திய அரசுக்கு நன்றி கூறிய ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம்
ஆபரேஷன் சிந்து மூலம் நாடு திரும்பிய மாணவர்கள் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். "சரியான நேரத்தில் தலையீடு மற்றும் ஆதரவுக்காக இந்திய அரசு, வெளியுறவு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றி. அவர்கள் திரும்பி வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணம்" என்று ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ