)
இஸ்லாமியப் புத்தாண்டு மொஹ்ரம் ஜூன் 27 ம் தேதியான அன்று தொடங்கிய நிலையில், மொஹர்ரம் பண்டிகை நெருங்கி வருவதால், சந்திரன் தோன்றுதை பொறுத்து, இந்தியாவில் ஜூலை 6 அல்லது 7, 2025 அன்று கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜூலை 7, 2025 விடுமுறையாக அறிவிக்கப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவகல்கள் ஏதேனும் உள்ளதா என இந்தியா முழுவதும் பள்ளிகளும் பெற்றோர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் ஹிஜ்ரி நாட்காட்டியில் முஹர்ரம் மாதத்தின் 1வது நாளில் அனுசரிக்கப்படுகிறது.
தற்போது, பெரும்பாலான அரசாங்க விடுமுறை நாட்காட்டிகளின்படி, மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை தேதி ஜூலை 6 என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்பார்க்கப்படும் மாலையில் பிறை தெரியவில்லை என்றால், பண்டிகை ஜூலை 7 ஆம் தேதிக்கு மாற்றப்படலாம். இது பல மாநிலங்களில் பள்ளி மற்றும் அலுவலக வங்கி விடுமுறைகளை பாதிக்கும்.
இந்தியாவில் முஹர்ரம் அரசிதழ் விடுமுறையாகக் கருதப்படுவதால், விடுமுறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். பல பள்ளிகள் ஜூலை 7 ஆம் தேதிக்கான விடுமுறையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஜூலை 7 ஆம் தேதி விடுமுறை உள்ளதா இல்லையா என தெரிந்து கொள்ள உள்ளூர் பள்ளி சுற்றறிக்கைகள் மற்றும் மாவட்ட அளவிலான அறிவிப்புகளை பெற்றோர்கள் கவனிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், மொஹர்ரம் தேதி நெருங்கும் போது புதுப்பிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில், பிறை தோன்றுவதில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, முஹர்ரம் அனுசரிப்பு பிராந்தியங்களுக்கு இடையே மாறுபட்டுள்ளது. இதனால் உண்மையான விடுமுறை தேதி குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முஹர்ரம் பண்டிகை விடுமுறை ஜூலை 7ம் தேதி அறிவிக்கப்பட்டால், அன்றையை தினத்தில் இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள் மற்றும் பல தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பொது விடுமுறை பொருந்தும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் முஹர்ரம் நாளில் மூடப்பட்டிருக்கும். தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) இரண்டும் முஹர்ரம் அன்று வர்த்தகத்திற்காக மூடப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ