நண்பேன்டா! கை கொடுக்கும் ரஷ்யா.. இந்தியாவை நோக்கி வரும் 95 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்!

Russian Oil India News: வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், 'ஹார்முஸ் ஜலசந்தி' வழியாக வரும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதை முன்கூட்டியே கணித்த இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து சுமார் 95 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வரவழைத்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 5, 2026, 08:23 PM IST
  • இந்தியக் கடல் எல்லைக்கு அருகில் 95 லட்சம் பேரல் ரஷ்ய எண்ணெய் தயார் நிலை.
  • ஹார்முஸ் ஜலசந்தி முடங்கினால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க இந்த ஏற்பாடு.
  • இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கான எண்ணெய் இருப்பு உள்ளது.
நண்பேன்டா! கை கொடுக்கும் ரஷ்யா.. இந்தியாவை நோக்கி வரும் 95 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்!

ரஷ்ய கச்சா எண்ணெய் செய்திகள்: மத்திய கிழக்கில் (Middle East) நிலவும் போர்ச் சூழலால், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக வரும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா ரஷ்யாவை ஒரு 'பாதுகாப்பு அரணாக' மாற்றியுள்ளது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யா மீண்டும் தனது 'நட்பு' கரத்தை நீட்டியுள்ளது. சுமார் 95 லட்சம் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் தற்போது இந்திய கடல் எல்லைக்கு அருகிலுள்ள டேங்கர்களில் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add Zee News as a Preferred Source

ஏன் இந்த அவசர நடவடிக்கை?

மேற்கு ஆசியாவில் நிலவும் ராணுவ மோதல்கள் காரணமாக, உலக நாடுகளுக்குத் தடையின்றி எண்ணெய் விநியோகிக்கும் 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40-50% இந்த வழியாகவே வருகிறது.

ஒருவேளை இந்த வழித்தடம் முடக்கப்பட்டால், இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ரஷ்ய எண்ணெயை 'பேக்-அப்' ஆகப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடல் எல்லையில் காத்திருக்கும் ரஷ்ய டேங்கர்கள்

சுமார் 95 லட்சம் (9.5 Million) பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் தற்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் சிங்கப்பூர் ஜலசந்தி பகுதிகளில் டேங்கர்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியக் கடற்பரப்புக்கு அருகில் இருக்கும் இந்த 95 லட்சம் பேரல்கள், அவசர காலத்தில் சில வாரங்களிலேயே இந்திய சுத்திகரிப்பு நிலையங்களை வந்தடையும்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்கள் 5-7 நாட்களில் வந்துவிடும். ஆனால் ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதிகளிலிருந்து எண்ணெய் வர 25-45 நாட்கள் ஆகும்.

இந்தியாவின் எரிசக்தி கையிருப்பு (Reserves) புள்ளி விவரம்

இந்தியா தனது தேவையைச் சமாளிக்க மூன்று அடுக்குப் பாதுகாப்பை வைத்துள்ளது.

வகை கையிருப்பு அளவு சமாளிக்கக்கூடிய நாட்கள்
வணிகக் கையிருப்பு (Commercial) ~100 மில்லியன் பேரல் சுமார் 25-30 நாட்கள்
மூலோபாய சேமிப்பு (SPR) 39 மில்லியன் பேரல் சுமார் 9.5 - 10 நாட்கள்
மொத்த பாதுகாப்பு 139 மில்லியன் பேரல் சுமார் 75 - 80 நாட்கள்

சர்வதேச எரிசக்தி முகமை (IEA) பரிந்துரைக்கும் 90 நாட்கள் கையிருப்பை விட இது சற்று குறைவு என்றாலும், ரஷ்யாவின் உடனடி விநியோகம் இந்த இடைவெளியை நிரப்பும்.

ரஷ்யா ஏன் இந்தியாவின் நம்பகமான பார்ட்னர்?

உக்ரைன் போர் தொடங்கிய போது, சில உலக நாடுகள் தடுத்தாலும் ரஷ்யா இந்தியாவிற்குத் தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்கியது. 2022-க்கு முன் 1% க்கும் குறைவாக இருந்த ரஷ்யாவின் எண்ணெய் பங்கு, இந்தியாவின் மிகப்பெரிய இறக்குமதி ஆதாரமாக மாறியுள்ளது.

அதன்பிறகு அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறைந்திருந்தாலும், தற்போதைய இக்கட்டான சூழலில் ரஷ்யா மீண்டும் களம் இறங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

ஜனவரி 2026 நிலவரப்படி, அமெரிக்கத் தடைகள் மற்றும் வரி அழுத்தங்கள் காரணமாக ரஷ்யாவின் பங்கு 21.2% ஆகக் குறைந்திருந்தது. அதன்பிறகு பிப்ரவரி 2026 நிலவரப்படி,நாள் ஒன்றுக்கு சுமார் 17 லட்சம் பேரல்கள் என இது 30% ஆக உயர்ந்தது.

தற்போதைய சூழலில் போர் நீடித்தால், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவை 40% வரை உயர்த்த இந்தியா தயாராக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயருமா?

மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்தால், இந்தியா தனது எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா பக்கம் திருப்பும். இதன் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், உள்நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், "கடல் கடந்து வரும் இந்த ரஷ்ய எண்ணெய், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு லைஃப்லைன்" போன்றது என பொருளாதரா நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க - Strait of Hormuz | ஹார்முஸ் நீரிணை ஏன் இவ்வளவு முக்கியம்? உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் எரிசக்திப் போர்!

மேலும் படிக்க - 'தப்பு பண்ணிட்டியே சிங்காரம்' உச்சக்கட்ட வெறியில் ஈரான்... அமெரிக்காவுக்கு பெரிய வார்னிங்

மேலும் படிக்க - Khamenei Death | ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொலை: இந்திய வெளியுறவுச் செயலாளர் நேரில் இரங்கல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News