Kunal Kamra Issue: நாட்டு நடப்புகள் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கும் நயா பாரத் என்ற நிகழ்ச்சியில், நகைச்சுவை கலைடரான குணால் கம்ரா பாடிய ஒரு பாடல் தற்போது அரசியல் தளத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குணால் கம்ரா நகைச்சுவை தொனியில் Dil To Pagal Hai என தொடங்கும் பாடலை இந்தியில் பாடியிருக்கிறார்.
Kunal Kamra Issue: குணால் கம்ரா பேசியது என்ன?
அதில், மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், சிவசேனா கட்சியின் ஷிண்டே தரப்பு தலைவருமான உள்ள ஏக்நாத் ஷிண்டேவை 'துரோகி' என குறிப்பிட்டு பாடியதாக அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. ஷிண்டே கட்சியை இரண்டாக்கி, மொத்தமாக பாஜகவுடன் கைக்கோர்த்துவிட்டதாக மறைமுகமாக அந்த பாடலில் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதில் அவர் 'தானே நகரில் இருந்த வந்த தலைவர்' என குறிப்பிட்டது ஏக்நாத் ஷிண்டேவை தான் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஷிண்டேவின் உருவ தோற்றம் குறித்தும், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடனான ஷிண்டேவின் போக்கு குறித்தும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பாடலில் அவர் ஏக்நாத் ஷிண்டேவின் பெயரை வெளிப்படையாக கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Kunal Kamra Issue: ஸ்டுடியோவை அடித்து உடைத்த சிவசேனா
இதுதான் ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, மும்பை கர் பகுதியில் உள்ள யூனிகான்டினென்டல் ஹோட்டலையும், அங்குள்ள Habitat ஸ்டுடியோவையும் அடித்து உடைத்துள்ளனர். அதாவது, குணால் கம்ரா பாடிய அந்த நிகழ்ச்சி அங்குதான் நடந்திருப்பதாக சிவசேனா தொண்டர்கள் கூறுகின்றனர்.
அதிலும், மும்பையில் நீண்ட காலமாகவே முக்கிய அரசியல் புள்ளியாக அறியப்படும் நபரும், சமீபத்தில் சிவசேனாவில் இணைந்தவருமான சஞ்சய் நிருபம் நேற்று அவரது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்ததும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது எனலாம். அவரது பதிவில்,"நாங்கள் குணால் கம்ராவுக்கு நாளை (அதாவது இன்று) காலை 11 மணிக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம்" என குறிப்பிட்டிருந்தார்.
Kunal Kamra Issue: குணால் மீதும் வழக்குப்பதிவு
குணால் கம்ரா பாடிய பாடலின் வீடியோ வைரலானதை தொடர்ந்து ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சியினர் ஸ்டுடியோவை அடித்து உடைத்துள்ளனர். இதுதொடர்பாக ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சியின் எம்எல்ஏ முர்ஜி பட்டேல் அளித்த புகாரை அடுத்து குணால் கம்ரா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ஸ்டுடியோவை உடைத்த வழக்கில் 11 சிவசேனா தொண்டர்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Kunal Kamra Issue: மன்னிப்பு கேட்க முடியாது - குணால் கம்ரா
இதுதொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், குணால் கம்ரா மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் கீழ்த்தரமான நகைச்சுவை செய்தல், துணை முதலமைச்சரை அவமரியாதை செய்தல் வரை நீள்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பேசியிருந்தார்.
இந்நிலையில், தான் யாரிடமும் மன்னிப்பு கேட்க இயலாது என்றும் சட்ட ரீதியாக நீதிமன்றம் மன்னிப்பு கேட்க சொன்னால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் என்றும் குணால் கம்ரா கூறியுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. மேலும், தற்போது தான் மும்பையில் இல்லை என்றாலும் வழக்கு விசாரணையில் தான் முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என்றும் போலீசாரிடம் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், குணால் கம்ரா ஆஜராவதற்கு எவ்வித காலக்கெடுவையும் போலீசார் தற்போது வரை விதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | குழந்தை வைத்திருந்த பெண்ணை அறைந்த பாதிரியார்! அதிர்ச்சுயூட்டும் சிசிடிவி காட்சி..
மேலும் படிக்க | நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்... கொலீஜியம் எடுத்த அதிரடி முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ