‘சரக்கு அடி.. பீடி புடி’ மனைவிக்கு பேய் ஓட்ட கணவன் செய்த காரியம்!

Woman Forces To Drink Alcohol During Black Magic Rituals: பேயை விரட்டுவதாக கூறி,  பெண்ணை அவரது குடும்பமே சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தும், பீடி புகைக்க வைத்தும் கட்டாயப்படுத்தியது தெரியவந்தது.  

Written by - Umabarkavi K | Last Updated : Nov 8, 2025, 05:09 PM IST
  • பெண்ணுக்கு நடந்த மாந்த்ரீக பூஜை
  • கணவர், தந்தை கொடுத்த சித்ரவதை
  • அதிர்ச்சி சம்பவம்
‘சரக்கு அடி.. பீடி புடி’ மனைவிக்கு பேய் ஓட்ட கணவன் செய்த காரியம்!

Kerala Crime News: என்னதான் நவீன தொழிற்நுட்பத்திற்கு நாடு வளர்ந்து கொண்டே இருந்தாலும், இன்னும் மூட நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. மூட நம்பிக்கையின் உச்சமாக பல்வேறு இடங்களில் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான், தற்போது  அண்டை மாநிலமான கேரளாவில் நடந்துள்ளது. பேய் விரட்டுவதாக கூறி, பெண்ணுக்கு நடந்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Zee News as a Preferred Source

பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் மாந்திரீகம் என்ற பெயரில் இளம் பெண்ணை பல மணி நேரம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்து, பீடி புகைக்கவும், மது அருந்தவும் கட்டாயப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக மந்திரவாதி சிவதாஸ் (54), பெண்ணின் கணவர் அகில் தாஸ் (26) மற்றும் அவரது தந்தை தாஸ் (54) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பெண்ணுக்கு நடந்த சடங்கை தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால், பெண்ணி தந்தை மணார்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்த நிலையில், பெண்ணின் தாயை போலீசார் தேடி வருகின்றனர்.  

காவல்துறையின் கூற்றுப்படி, பெண்ணின் உடம்பில் இறந்த உறவினர்களின் தீய சக்திகள் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகித்தனர். இதனால், கடந்த வாரம் பெண்ணின் கணவர அகிலின் தாய் மந்திரவாதி சிவதாஸை வீட்டிற்கு அழைத்து வந்தார்.  வீட்டில் அந்த மந்திரவாதி காலை 11  மணி முதல் இரவு  9  மணி வரை சடங்குகளை நடத்தியுள்ளார். 

கணவர், தந்தை உட்பட 3 பேர் கைது

இந்த மாந்திரீக சடங்கின் போது, பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளனர். மேலும், பீடி புகைக்கவும் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.  சாம்பலை கட்டாயமாக சாப்பிட சொல்லி கொடுத்துள்ளனர்.  இதனால், அந்த பெண் உடல் ரீதியாக சித்ரவதையை அனுபவித்தார். இதனால், அந்த பெண் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டதாக போலீசார் கூறினர். 

இந்த சம்பவத்திற்குப் பிறகு தனது தொலைபேசியை ஆப் செய்துவிட்டு, தலைமறைவாக இருந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மந்திரவாதி, திருவல்லாவின் முத்தூர் பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், கோட்டயம் காவல்துறை தலைவர் ஷாகுல் ஹமீது கூறுகையில், ”அகிலும் அந்த பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை.

அந்த பெண் குடும்பத்தை விட்டு வெளியேறி, அகிலுடன் வாழ்ந்து வந்தார்.  தம்பதியினரிடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. ஏற்கனவே, இந்த பிரச்னை இவர்கள் இரண்டு காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர். பின்னர், குடும்பத்தின் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்" என்றார்.  பேய் விரட்டுவதாக கூறி, பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடுமைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: பெண்களுக்கு மாதம் ரூ.1500... இதை செய்யாவிட்டால் பணம் வராது - கடைசி நாள் இதுதான்!

மேலும் படிக்க: குருவாயூர் கோயிலில் ரீல்ஸ்..இன்ஸ்டா பிரபலம் மீது வழக்குப்பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News