)
Woman Video On Blinkit Delivery Person : மும்பையில் ஒரு பெண், BLINK IT டெலிவரி டிரைவர் தன்னை தகாத முறையில் தொட்டதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டது விவாதத்தை கிளப்பியுள்ளது. உணவுப் பார்சலைக் கொடுக்கும் போது ஓட்டுநர் தனது மார்பைத் தொட்டதாகக் அவர் ஒரு வீடியோவை X தளத்தில் பகிர்ந்துள்ளார். BLINK IT சீருடையை அணிந்த நபர், ஒரு பார்சலைக் கொடுத்து பணம் பெறுவதை அந்த வீடியோவில் காண முடிகிறது. அப்போது சில்லறை பணத்தை அவர் திருப்பித் தரும்போது, அவர் அந்தப் பெண்ணின் மார்பைத் தொடுவது போல் தெரிகிறது.
அடுத்தடுத்த ட்வீட்களில், அந்தப் பெண் BLINK IT மீது தனது விரக்தியை வெளிப்படுத்தினார். அவர் வெளியிட்ட பதிவில், BLINK IT-ல் ஆர்டர் செய்தபோது எனக்கு இதுதான் நடந்தது. டெலிவரி செய்பவர் மீண்டும் என் முகவரியைக் கேட்டார், பின்னர் தகாத முறையில் என்னைத் தொட்டார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தயவுசெய்து BLINK IT நிறுவனம் இவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுங்கள். இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு ஒரு நகைச்சுவையா?" என்று அவர் காட்டமாக ட்வீட் செய்திருந்தார். சம்பவத்திற்கான ஆதாரத்தை வழங்கிய பின்னரே BLINK IT நிறுவனம் டெலிவரி ஊழியர் மீது நடவடிக்கையை எடுத்தது.
மும்பை காவல்துறையும் அவரது ட்வீட்டிற்கு பதிலளித்து, "நாங்கள் உங்களைப் பின்தொடர்ந்துள்ளோம். தயவுசெய்து உங்கள் தொடர்பு விவரங்களை DM இல் பகிரவும்" என்று எழுதியது. X-ல் இந்த பெண்ணின் பதிவிற்கு கலவையான கமெண்டுகள் வந்தன. பெரும்பாலான பயனர்கள் அந்தப் பெண்ணை ஆதரித்து, Blinkit டெலிவரி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இருப்பினும், சில பயனர்கள் அந்தத் தொடுதல் தற்செயலாக நடந்திருக்கலாம் என்று கூறினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ