அடேங்கப்பா! இந்த நகரத்துல இவ்ளோ மொழி பேசுறாங்களா!
பெங்களூர் நகரில் மட்டும் 107 மொழிகள் பேசப்படுவதாக மக்கள் கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்போது செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில், டெல்லி, மும்பை,மற்றும் சென்னை உள்ளிட்ட மெட்ரோபாலிட்டன் நகரங்களில் முக்கியமானது பெங்களூரு. இங்கு ஏராளமான IT நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.
பெங்களூர்: பெங்களூர் நகரில் மட்டும் 107 மொழிகள் பேசப்படுவதாக மக்கள் கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்போது செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில், டெல்லி, மும்பை,மற்றும் சென்னை உள்ளிட்ட மெட்ரோபாலிட்டன் நகரங்களில் முக்கியமானது பெங்களூரு. இங்கு ஏராளமான IT நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு நகரத்தில் மட்டும் 107 மொழிகள் பேசப்படுவதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கல்வியாளர்களால் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் வரையறுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 22 மொழிகளும் பட்டியலில் இடம்பெறாத 84 மொழிகளும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. பெங்களூரில் 44 சதவீதம் பேர் கன்னடம் பேசுபவர்களாகவும் தமிழை 15% பேரும், தெலுங்கு மொழியை 14% பேரும், உருது 12% பேரும், இந்தியை 6% பேரும், மலையாளத்தை 3% பேரும் பேசுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் உள்ள திமாபூர் (103), அசாமின் சோனிட்புர் (101) ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றனர். ஏனாம் (புதுச்சேரி), கைமுர் (பீகார்), கான்புர் தெஹாத்(உ.பி), அரியலூர் (தமிழ்நாடு) ஆகியவை குறைந்த மொழிகள் பேசும் மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR