மோடி ஓய்வுக்கு பின் யோகி தான் பிரதமரா? அதற்கு அவரே சொன்ன பதிலை பாருங்க!

Yogi Adityanath: அடுத்த பிரதமர் என பேச்சுகள் உள்ளதே என யோகி ஆதித்யநாத்திடம் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 1, 2025, 04:20 PM IST
  • 2017இல் உத்தர பிரதேச முதலமைச்சரானார் யோகி ஆதித்யநாத்.
  • 2022 உத்தர பிரதேச தேர்தலில் மீண்டும் வென்று முதல்வரானார்.
  • பிரதமர் மோடி ஓய்வு பெற இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
மோடி ஓய்வுக்கு பின் யோகி தான் பிரதமரா? அதற்கு அவரே சொன்ன பதிலை பாருங்க!

Yogi Adityanath: பிரதமர் மோடி தீவிர அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெற இருப்பதாகவும், அடுத்த பிரதமரை தேர்வு செய்ய பின்னணியில் வேலைகள் நடப்பதாக கடந்த 2 நாள்களாக பேச்சுக்கள் அதிகமாகி உள்ளன.

Add Zee News as a Preferred Source

Yogi Adityanath: வருங்கால பிரதமரா யோகி ஆதித்யநாத்? 

வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து பிரதமர் பதவியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஓய்வுபெற்று விடுவார் என கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போதைய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், வருங்கால பிரதமராக இருப்பார் என பலரும் தங்களின் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், தனது அரசியல் எதிர்காலம் குறித்தும் யோகி ஆதித்யநாத் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். செய்தி முகமையான PTI நிறுவனத்திற்கு யோகி ஆதித்தநாத் அளித்த அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,"முதலில், நான் இந்த மாநிலத்தின் முதல்வர், உத்தரபிரதேச மக்களுக்காக கட்சி (பாரதிய ஜனதா கட்சி) என்னை இங்கே கொண்டுவந்துள்ளது.

மேலும் படிக்க | யோகி ஆதித்யநாத்திடம் மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்... இது கலவர அரசியல் அல்ல!

Yogi Adityanath: அரசியல் எனக்கு நிரந்தரம் அல்ல... 

அரசியல் எனக்கு முழுநேர வேலை இல்லை. தற்போது, இங்கே பணியாற்றுகிறோம். ஆனால் நிதர்சனத்தில், நான் ஒரு யோகி" என்றார்.  எதற்கும் ஒரு காலக்கெடு இருக்கும் என்று கூறிய அவர் அரசியல் என்பது தனக்கு நிரந்தரமான வேலை இல்லை என்றும் கூறியிருந்தார்.

Yogi Adityanath: ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். இதையொட்டியே, உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பிரதமர் மோடி ஓய்வு குறித்த பரபரப்பு கருத்தை தெரிவித்திருந்தார்.

Yogi Adityanath: 75 வயதுக்கு பின் பதவி கிடையாதா...?

அதாவது, கடைசியாக பிரதமர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வருகை தந்து 10-11 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் வரும் செப்டம்பரில் அவருக்கு 75 வயது நிறைவடைவதால் அவரை பிரதமர் பதவியில் இருந்து ஓய்வை அறிவிக்க ஆர்எஸ்எஸ் விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மகிழ்விக்கவே பிரதமர் மோடி அங்கு வருகை தந்தார் எனவும் அடுத்த பிரதமர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராக இருப்பார் என்றும் கூறினார்.

Yogi Adityanath: உடன்படும் காங்கிரஸ்... மறுக்கும் பாஜக 

அதாவது, பாஜகவில் 75 வயதுக்கு பின்னர் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாது என்ற ரகசிய விதி இருக்கிறது என்றும் அதன் அடிப்படையிலேயே பிரதமர் மோடி ஓய்வை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய மத்திய அமைச்சரவையில் முன்னாள் பீகார் முதல்வராக இருந்த ஜிதன் ராம் மாஞ்சி ஒருவர் மட்டுமே 80 வயதை கடந்தவர் ஆவார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சஞ்சய் ராவத் கருத்துக்கு காங்கிரஸ் தரப்பும் உடன்பட்ட நிலையில், பாஜக தரப்போ இந்த கருத்துகளை முற்றிலும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 'ஓய்வை அறிவிக்கிறார் பிரதமர் மோடி' - ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்ற பின்னணி இதுதானா...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News