பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் (JP Nadda) புதிய குழுவில், அனுபவம் வாய்ந்தவர்களுடன் துடிப்பு மிக்க இளை தலைமுறையும் இணைய உள்ளனர். BJP தலைவரின் குழுவில் அனுபவம் வாய்ந்தவர்களுடன் இளைய தலைமுறையினருக்கும் பொறுப்பு வழங்கப்படும்
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய குழுவின் உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சாதிக்க நினைக்கும் துடிப்பு மிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
700 க்கு மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள தலைவர்கள் உட்பட கட்சி அலுவலர்களின் சராசரி வயது 50 வயதிற்குட்பட்டதாக இருப்பதை போலவே, BJP தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு (JP Nadda)கட்சிப் பணியில் உதவும் புதிய அணியில் உள்ள உறுப்பினர்களின் சராசரி வயது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கட்சியின் மூத்த அலுவலர் தெரிவித்தார்.
COVID-19 நோயாளி வெளியிட்ட பரபரப்பு வீடியோவினால், ஏற்பட்ட சிக்கல்…!!!
புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் குழுவில் அனுபவம் மிக்கவர்களுடன், துடிப்பு மிக்க ஆர்வம் கொண்ட இளைஞர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேசிய குழுவில் இணையும் இளைய, துடிப்பு மிக்க குறைந்த அனுபவமுள்ள முகங்கள் கட்சியின் முடிவெடுக்கும் அமைப்பு, நாடாளுமன்ற வாரியம் மற்றும் தேசிய செயற்குழு ஆகியவற்றில் இடம் பெறுவார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
2017 ஆம் ஆண்டில் கட்சித் தலைமை இளைய தலைவர்களுக்கு பொறுப்புகளை வழங்க முடிவு செய்தது. அப்போதிருந்து மாவட்டத்திலும் மாநில அளவிலும் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் 40-50 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல்களில் போட்டியிடுவதற்கோ அல்லது பதவிகளுக்கு நியமனம் செய்வதற்கோ 75 வயதிற்குள் இருக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது, ”என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி பேசிய கட்சி அலுவலர் ஒருவர், உத்தரபிரதேசத்தில் கட்சி அலுவலத்தில் உள்ளவர்களின் சராசரி வயது 40 முதல் 45 வரை என்று பாஜக கட்சி உறுப்பினர் கூறினார். அதே போன்று பீகாரில், மாவட்ட நிலையிலான தலைவர்களின் சராசரி வயது 45 ஆகும்.
ALSO READ | உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானதாக இருக்கும்: PM Modi
"இளையவர்களுக்கு அதிக பொறுப்பை வழங்குவதற்கும் நிர்வாக செயல்முறைகளில் அனுபவம் பெறுவதற்கும் ஆன வாய்ப்பை வழங்குவதற்கும் ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கை தான் இது" என்று கட்சி அலுவலகத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
அலுவலக பொறுப்பாளர்கள் குழுவில் சேர்க்கும் நடைமுறையில் 33% இடங்களை பெண்களுக்கு கொடுப்பதில் கட்சி உறுதியாக உள்ளது. 2010 ஆம் ஆண்டில், தனது கட்சியின் அரசியலமைப்பில் திருத்தம் செய்துள்ளது.