தனது தந்தையின் தியாகத்தை அவமதித்த மோடிக்கு அமேதி மக்கள் தக்க பதில் அளிப்பார்கள் என பிரியங்கா காந்தி தெரவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக உத்திரபிரதேசம் மாநில தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது நன்மதிப்பை சீர்குலைப்பதற்காக ரபேல் விமான ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி தன்னை குற்றம்சாட்டி வருவதாக தெரிவித்தார்.


மேலும் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ்காந்தி நேர்மையானவர் என்று அவரது விசுவாசிகளால் கூறப்பட்ட நிலையில் அவர் தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் ஊழலில் ‘நம்பர் ஒன்’னாக திகழ்ந்தார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். 


போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டதை சுட்டிக்காட்டி மோடி, ராஜீவ்காந்தி இறந்தபோது ஊழல்வாதி என்னும் பெயரில் இறந்தார் எனவும் குறிப்பிட்டார்.



இறந்துப்போன தலைவர் ஒருவரை பற்றி இவ்வாறு பேசிய பிரதமர் மோடியின் கருத்து தலைவர்கள் பலரது மத்தியில் கடும் அதிருப்பதி ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் இந்த கருத்திற்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், ராஜீவ் காந்தி ஊழல்வாதியாக இறந்தார் என்று என் தந்தையின் தியாகத்தை அவமதித்த பிரதமர் மோடிக்கு அமேதி மக்கள் இந்த தேர்தலில் பதில் அளிப்பார்கள் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘உயிரிழந்த ராணுவ வீரர்களின் பெயரால் வாக்கு சேகரித்து பிரசாரம் செய்யும் பிரதமர் அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டின் பேரில் நேர்மையான ஒரு நிரபராதி மனிதரை தனது பேச்சின் மூலம் அவமதித்திருக்கிறார்.


தனது உயிரை கொடுத்து பாடுபட்டவர் ராஜீவ் காந்தி. அமேதி தொகுதி மக்கள் அவரது குற்றச்சாட்டுக்கு இந்த தேர்தலில் பதில் அளிப்பார்கள். ஆமாம் மோடி அவர்களே இந்த நாடு மோசடிக்காரர்களை ஒருபோதும் மன்னிக்காது’ என குறிப்பிட்டுள்ளார்.