)
Sridhar Vembu Divorce Case : இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் முக்கிய ஐடி சேவை நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கிறது, ZOHO. இதன் நிறுவனராக இருக்கும் ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களுள் ஒருவராக இருக்கிறார். இவரும், இவரது மனைவி பிரமிளாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற முடிவு செய்தனர். இந்த வழக்கு, அமெரிக்காவின் வாஷிங்க்டனில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 1.7 பில்லியன் டாலர் (ரூ.15,288 கோடி) bond தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
ZOHO நிறுவனர்:
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ZOHO நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது, இந்தியாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, மூத்த விஞ்ஞானியாகவும் தென் தமிழகத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குபவராகவும் இருக்கிறார்.
இந்தியாவில் வந்து செட்டில் ஆகும் முன்பு, ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் இருந்தார், அவரது மனைவியின் பெயர், பிரமிளாவின் சீனிவாசன். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 2021ஆம் ஆண்டில் இருவரும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இவர்களின் விவாகரத்து வழக்கு அமெரிக்காவின் வாஷிங்க்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஸ்ரீதர் வேம்பு மீது சில பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரமிளா, தன் மகனையும் தன்னையும் அவர் நிர்க்கதியாக விட்டுவிட்டு சென்று விட்டதாக கூறியிருந்தார். மேலும், பராமரிப்பு செலவுக்கு பணம் வழங்கவில்லை என்றும், ஜோஹோ நிறுவனத்தில் தன் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் சொத்துகளை அவரது சகோதரியின் பெயரிலும், அவர் கணவர் பெயரிலும் மாற்றிவிட்டதாக கூறியிருந்தார். விவாகரத்துக்கு பின், சொத்தில் சரிபாதியை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அவர் இப்படி செய்திருந்ததாக பிரமிளா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் ஸ்ரீதர் வேம்பு இவை அனைத்தையும் மறுத்திருந்தார்.
பாண்ட் பத்திரம் வழங்க உத்தரவு!
ஸ்ரீதர் வேம்பு-பிரமிளாவின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஸ்ரீதர் வேம்பு தன் மனைவி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும், இதற்காக 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பாண்டை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பின்படி ரூ.15,288 கோடிக்கும் மேலாகும்.
கலிபோர்னியாவின் குடும்ப சட்டத்தின் படி, கணவன் - மனைவி திருமண உறவில் இருக்கும் போது, அவர்களின் சொத்துகள், அவர்களுக்கான சொத்துகளாக பார்க்கப்படுகிறது. இதனை, தம்பதியினர் இருவரும் சரிசமமாக சேர்ந்து பிரித்துக்கொள்ள வேண்டும். ஆனால், கணவன் மனைவியாக இருந்த போது சொத்துகளை பிரிப்பது மற்றும் சொத்து பரிமாற்றங்கள் குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்திருக்கிறது.
குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சர்ச்சை பேச்சு!
சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீதர் வேம்பு குழந்தை பெற்றுக்கொள்ளும் காலம் குறித்து பேசியது சர்ச்சையாக மாறியது. தொழிலதிபரும் நடிகர் ராம் சரணின் மனைவியுமான உபாசனா, தான் குழந்தை பெற்றுக்கொள்ளும் காலத்தை தானே முடிவு செய்ததாகவும், இன்றைய இளம் பெண்கள் அதில் தெளிவாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஸ்ரீதர் வேம்பு, தான் எங்கு சென்றாலும் 20களில் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என இளைஞர்களுக்கு கூறுவதாக பேசியது, விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது. இப்போது மீண்டும் தனது விவாகரத்து செய்தி மூலம் இவர் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ