இணையத்தில் வெளியானது! 'காளி' படத்தின் முதல் 7 நிமிட காட்சி!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி திரைப்படத்தின் முதல் 7 நிமிட காட்சி இணையத்தில் வெளியானது!

Updated: May 16, 2018, 07:03 PM IST
இணையத்தில் வெளியானது! 'காளி' படத்தின் முதல் 7 நிமிட காட்சி!

‘எமன்’ ‘அண்ணாதுரை’ படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘காளி’. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். வணக்கம் சென்னை படத்திற்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கம் படம் ‘காளி’ என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, அம்ரிதா, ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருக்கிறார். 

ஏற்கனவே, இந்த ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதேபோல ‘அரும்பே’ எனும் சிங்கிள் டிராக் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வருகிற  மே 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ஒரு மருத்துவராக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், பிரமோஷனுக்காக இந்த திரைப்படத்தின் முதல் 7 நிமிட வீடியோவை விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.