17:12 19-05-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா சட்ட பேரவையில் எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபிறகு அதை கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்!




இன்று சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாகஎடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.


 



கார்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நாளில் இருந்து மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. கர்நாடக அரசியலில் நடைபெறும் அதிரடி திருப்பங்களை நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அநேகமாக, கர்நாடக அரசியலில் நிலவி வரும் பரபரப்புக்கு இன்று மாலை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.


இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.


இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.


இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் தற்போது சட்டசபையில்,  எம்எல்ஏக்கள் வரிசையாக பத்து பத்து பேராக அமர வைக்கப்படுவார்கள். பின் அவர்கள் கைதூக்கி வாக்களிப்பார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.