இளம் வயது மாரடைப்பை தவிர்க்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

Heart attack : இளம் வயது மாரடைப்பு அதிகரித்து வரும் சூழலில் இதில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 12, 2025, 01:34 PM IST
  • இளம் வயதில் மாரடைப்பு ஏன் வருகிறது?
  • இளம் வயது மாரடைப்பை தவிர்க்க வழிகள்
  • உணவு முதல் உடற்பயிற்சி வரை தினமும் செய்ய வேண்டியவை
இளம் வயது மாரடைப்பை தவிர்க்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

Heart Attack at Young Age : மாரடைப்பு எனும் உயிர்க்கொல்லி நோய் குறித்து அனைவரும் கேள்விபட்டிருப்பீர்கள். பல காரணங்களால் இந்த பாதிப்பு ஒருவருக்கு வரலாம். இருப்பினும் வாழ்க்கை முறை மாற்றத்தை சரிசெய்யும்போது பெரும்பாலும் மாரடைப்பு மூலம் உயிர்விடுவதை தவிர்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

1. ஜங்க் ஃபுட் ஒழிக்கவும் - பர்கர், பிஸ்ஸா, கூல் டிரிங்க்ஸ் போன்ற டிரான்ஸ் ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கச் சொல்லுங்கள். வீட்டு உணவுகள், பழங்கள், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறையை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. உடல் பயிற்சி வழக்கமாக்குங்கள் - குழந்தைகளை ஒரு நாளைக்கு 1 மணி நேரம் விளையாட/ஓட/ஜிம்னாஸ்டிக்ஸ் செய்ய ஊக்குவிக்கவும். மொபைல்/டேப்லெட் பயன்பாட்டை குறைக்க வீட்டில் விளையாட்டுகளை உருவாக்குங்கள்.

3. புகை & மது தவிர்க்க உதவுங்கள் - இளம் வயதிலேயே புகைப்பிடிப்பதின் ஆபத்தை விளக்குங்கள். மது அருந்துவதால் ஏற்படும் இதய பாதிப்புகளை எடுத்துரையுங்கள்.

4. மன அழுத்தத்தை குறைக்க கற்றுக் கொடுங்கள் - படிப்பு/தேர்வு அழுத்தம் காரணமாக இளம் வயதிலேயே BP அதிகரிக்கலாம். யோகா, மெடிடேஷன், இசை போன்றவற்றை பழக்கமாக்குங்கள்.

5. போதுமான தூக்கம் முக்கியம் - இரவு 10:00 மணிக்குள் படுக்கச் சொல்லுங்கள். 8-10 மணி நேரம் தூக்கம் இல்லாவிட்டால் இதய நோய் வரும் ஆபத்து.

6. டயபெட்டிஸ் & BP ஐ கண்காணிக்கவும் - வருடத்திற்கு ஒரு முறை குழந்தைகளின் இரத்த சோகை, ஷுகர், கொலஸ்ட்ரால் சோதிக்கவும்.

7. நீர் குடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் - ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்லுங்கள். சோடா/பாக்கெட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவும்.

8. குடும்ப உணவு பழக்கத்தை உருவாக்குங்கள் - ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துங்கள் – இது ஜங்க் ஃபுட் தவிர்க்க உதவும்.

9. பெற்றோருக்கான அறிவுரை - நீங்கள் ஆரோகியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இயல்பாக பின்பற்றுவார்கள்

10. இளம் வயதில் மாரடைப்பு அறிகுறிகள் - மார்பு வலி / அடைப்பு. மூச்சுத் திணறல். திடீர் வியர்வை / குமட்டல். இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனை செல்லவும். 

யாருக்கெல்லாம் இளம் வயதில் மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம்

மரபணு பாதிப்பு உள்ளவர்கள், அதாவது, குடும்ப வரலாறு: பெற்றோர்/சகோதரர்களுக்கு இளம் வயது மாரடைப்பு இருந்தால் அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு மாரடைப்பு வரலாம்.  கருப்பைக்குள்ளேயே இதயத்தில் குறைபாடுகள் இருந்தால், பிறவி இதய கோளாறுகள் காரணமாக மாரடைப்பு வரலாம். ஜங்க் ஃபுட், டிரான்ஸ் ஃட், சர்க்கரை நிறைந்த உணவுகள் இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரு நாளைக்கு 30 நிமிடம்கூட நடக்காதவர்கள், ஒரு நாளைக்கு 5 சிகரெட்டுக்கு மேல் புகைப்பவர்களில் இதய நோய் வரும் வாய்ப்பு 50% அதிகம். தொடர்ச்சியான மன அழுத்தம்: கார்ப்டிசோல் ஹார்மோன் இரத்த அழுத்தத்தை உயர்த்தும். வைட்டமின் D, B12, மெக்னீசியம் குறைவு, ஒரு நாளைக்கு 6 மணிநேரத்துக்கு குறைவாக தூங்குபவர்கள் மாரடைப்பால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முருங்கைக்காய் சாப்பிடக் கூடாதவர்கள் – முக்கிய காரணங்கள்

மேலும் படிக்க | காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News