மாதசம்பள வாங்குபவர்கள் ரூ.8 லட்சம் வரை வருமான வரியை சேமிக்க முடியும்! 10 வழிகள்

வருமான வரி விலக்கு (Income Tax Deduction):உங்கள் முதலீடுகள், வருமானங்கள் மற்றும் பிற வகை கொடுப்பனவுகளில் நீங்கள் பெறக்கூடிய சில வரி விலக்குகள் பற்றி உங்களுக்கு சொல்லப்போகிறோம். இந்த வரி விலக்கு புதிய வரி முறைக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 2, 2021, 05:34 PM IST
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2021.
  • அனைத்தையும் சேர்த்து வரி விலக்கு 1.5 லட்சத்தை தாண்டக்கூடாது என்பதை நினைவில் கொள்க.
  • ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளின் கல்விக் கடனுக்கு வரி விலக்கு கிடைக்கும்.
மாதசம்பள வாங்குபவர்கள் ரூ.8 லட்சம் வரை வருமான வரியை சேமிக்க முடியும்! 10 வழிகள்

வருமான வரி விலக்கு (Income Tax Deduction): 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு ஜூலை 31 வரை இருந்தது. உங்கள் வருமான வரி குறித்த திட்டமிடலுக்கு இந்த இரண்டு மாத கால இடைவெளியை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் முதலீடுகள், வருமானங்கள் மற்றும் பிற வகை கொடுப்பனவுகளில் நீங்கள் பெறக்கூடிய சில வரி விலக்குகள் (Tax Deduction) பற்றி உங்களுக்கு சொல்லப்போகிறோம். இந்த வரி விலக்கு புதிய வரி முறைக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1. வீட்டுக் கடன் வட்டிக்கு வரி விலக்கு:
நீங்கள் வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், வருமான வரி பிரிவு 24 (பி) ன் கீழ் செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும். வருமான வரி விதிகளின் படி, நீங்கள் 2 லட்சம் வரை வட்டி செலுத்துவதில் வரி விலக்கு பெறலாம். Self occupied சொத்து என்றால் மட்டுமே இந்த வரி விலக்கு கிடைக்கும்.

2. வீட்டுக் கடனின் முதன்மைத் தொகையைப் பெறுங்கள்:
வீட்டுக் கடனின் அசல் கட்டணத்தில் பிரிவு 80C இன் கீழ் நீங்கள் வரி விலக்கு பெறலாம். இருப்பினும், இந்த வரம்பு 1.5 லட்சத்தை தாண்டக்கூடாது. எனவே 80C-க்கு கீழ் உங்கள் மீதமுள்ள விலக்குகள் 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், வீட்டுக் கடனின் அசல் தொகையிலிருந்து இந்த வரம்பை பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் வரி விலக்கு கோரலாம்.

3. எல்ஐசி பிரீமியம், பிஎஃப், பிபிஎஃப், ஓய்வூதிய திட்டம்:
வருமான வரி பிரிவு 80 சி கீழ் அனைத்து வரி விலக்குகளையும் பெறுவீர்கள். உதாரணமாக, நீங்கள் எல்ஐசியின் பாலிசியை எடுத்திருந்தால், அதன் பிரீமியத்திற்கான விலக்கு நீங்கள் கோரலாம். வருங்கால வைப்பு நிதி, பிபிஎஃப், குழந்தைகள் கல்விக் கட்டணம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், வீட்டுக்கடன் ஆகியவற்றிற்கு 80 சி கீழ் வரி விலக்கு பெறலாம். நீங்கள் பிரிவு 80CCC இன் கீழ் எல்ஐசி அல்லது வேறு எந்த காப்பீட்டு நிறுவனத்தின் வருடாந்திர திட்டத்தை (ஓய்வூதிய திட்டம்) வாங்கியிருந்தால், நீங்கள் வரி விலக்கு கோரலாம். நீங்கள் பிரிவு 80 CCD (1) ன் கீழ் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தை வாங்கியிருந்தால், நீங்கள் அதில் விலக்கு கோரலாம். இவை அனைத்தையும் சேர்த்து வரி விலக்கு 1.5 லட்சத்தை தாண்டக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ALSO READ | TAX SAVING: வரியை எவ்வாறு சேமிப்பது? வரி செலுத்துவோருக்கு special Tips

4. மத்திய அரசு ஓய்வூதிய திட்டம்:
மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால், பிரிவு 80 CCD (1B) இன் கீழ் ரூ .50,000 கூடுதல் விலக்கு கிடைக்கும்.

பிரிவு 80 (C) இன் கீழ் பெறப்பட்ட 1.5 லட்சம் வரி விலக்குக்கு மேல் பெற மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்திற்கு நிறுவனம் அளித்த பங்களிப்பை பிரிவு 80 CCD2 ன் கீழ் கோரலாம். அதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. முதலாவதாக, நிறுவனம் ஒரு பொதுத்துறை யூனிட் (PSU), மாநில அரசு அல்லது வேறு ஏதாவது இருந்தால் விலக்கு வரம்பு சம்பளத்தின் 10 சதவீதமாகும். மத்திய அரசு நிறுவனமாக இருந்தால், விலக்கு வரம்பு சம்பளத்தில் 14% ஆக இருக்கும்.

5. சுகாதார காப்பீட்டு பிரீமியம்:
நீங்கள் ஏதேனும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால் அல்லது வழக்கமான ஹெல்த் செக்கப் செய்திருந்தால், பிரிவு 80 டி -யின் கீழ் பிரீமியம் விலக்கு கோரலாம். ஆனால் இதன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

உங்களுக்காக, மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக நீங்கள் ஒரு சுகாதார காப்பீட்டு பாலிசியை எடுத்திருந்தால், நீங்கள் ரூ. 25,000 வரை பிரீமியம் விலக்கு கோரலாம். இதில் பெற்றோரின் வயது 60 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும். உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால், வரி விலக்கு வரம்பு 50,000 ரூபாய் ஆகும். இதில் மருத்துவ பரிசோதனைக்கும் 5000 ரூபாய் விலக்கு பெறலாம். வரி விலக்கு சுகாதார காப்பீட்டின் பிரீமியத்தை தாண்டக்கூடாது.

6. மாற்றுத்திறனாள சார்பாளர்களின் மருத்துவ மற்றும் பராமரிப்பு செலவுகள்:
மாற்றுத்திறனாளிகளின் சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்கான செலவுகள் விலக்கு கோரலாம். ஒரு வருடத்தில் நீங்கள் ரூ .75,000 வரை விலக்கு கோரலாம். சார்ந்திருக்கும் நபருக்கு 80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஊனம் இருந்தால், மருத்துவச் செலவுகளுக்கு ரூ .1.25 லட்சம் வரி விலக்கு கோரப்படலாம்.

ALSO READ | ஒன்றுக்கு மேற்பட்ட PAN Card இருக்கா? ரூ.10000 சேமிக்க இதைச் செய்யுங்கள்

7. மருத்துவ சிகிச்சை செலுத்தும் வரி விலக்கு:
வருமான வரி பிரிவு 80 DD (1B) ன் கீழ் குறிப்பிட்ட சுயநோய் அல்லது சார்பு நோய் சிகிச்சைக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் ரூ .40,000 வரை விலக்கு கோரலாம்.
அந்த நபர் மூத்த குடிமகனாக இருந்தால், ரூ .1 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். 

8. கல்வி கடன் வட்டிக்கு வரி விலக்கு:
கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு நன்மை கிடைக்கிறது. நீங்கள் மொத்தம் 8 ஆண்டுகளுக்கு வரி விலக்கு பெறலாம். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளின் கல்விக் கடனுக்கு வரி விலக்கு கிடைக்கும். இரண்டு குழந்தைகளுக்கு 10% வட்டி விகிதத்தில் 25-25 லட்சம் கடன் வாங்கப்பட்டால், ஆண்டு வட்டி மொத்தம் ரூ. 50 லட்சத்திற்கு 5 லட்சம் செலுத்த வேண்டும். இந்த முழுத் தொகைக்கும் வரிவிலக்கு கிடைக்கும்.

9. மின்சார வாகனத்திற்கான கடன்:
வருமான வரி பிரிவு 80EEB இன் கீழ், நீங்கள் ஒரு மின்சார வாகனம் வாங்க கடன் வாங்கியிருந்தால், நீங்கள் செலுத்தும் வட்டிக்கு 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இருப்பினும், இந்த வரி விலக்கு ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2023 வரை எடுக்கப்பட்ட கடன்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ALSO READ | வருமான வரியை தாக்கலுக்கு புதிய இணையதளம்; முக்கிய அம்சங்கள் பிற விபரம்

10. வீட்டு வாடகை:
HRA உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், நீங்கள் பிரிவு 80GG இன் கீழ் வீட்டு வாடகை கட்டணத்தை கோரலாம். ஆமாம், உங்கள் நிறுவனம் HRA கொடுத்தால், நீங்கள் 80 GG க்கு கீழ் வீட்டு வாடகையில் வரி விலக்கு கோர முடியாது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News