105 Year Old Japanese Doctor Tips For Longevity : நம்மில் பலருக்கு நூறு வயதை தாண்டி வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். உலக நாடுகளிலேயே ஜப்பானில் தான் நூறு வயது கடந்து வாழ்பவர்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி நாமும் வாழ நினைத்தால் இந்த 105 வயது மருத்துவர் சொல்வதை கொஞ்சம் கேட்க வேண்டும்.
105 வயது மருத்துவர்:
இந்த ஜப்பானை சேர்ந்த மருத்துவரின் பெயர், ஷிகேகி ஹினோஹாரா. 105 வயது ஆகும் இவர், ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் நூறு வயதை தாண்டி வாழ்வது எப்படி என்பதற்கான சிம்பிள் டிப்ஸை கொடுக்கிறார்.
ஓய்வு எடுக்காதீர்கள்:
நமக்கென்று ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்பு, கண்டிப்பாக வேலையில் இருந்து ஓய்வு பெறுவோம். ஆனால், மருத்துவர் ஹினோஹாரா அதைப்பற்றி கூறவில்லை. ஆனால், நாம் அதிக காலம் உயிர் வாழ வேண்டுமென நினைத்தால் கண்டிப்பாக வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும் என்கிறார். அப்போதுதான் உடல் ஆக்டிவாகை இருக்குமாம். இவருமே, தனது 100 வயது வரை 18 மணி நேரம் வேலை செய்தாராம். வேலையை விட்டு நின்றாலும், தோட்ட பராமரிப்பு, வாலண்டியர் செய்வது போன்ற விஷயங்களில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்.
உடலுக்கு உழைப்பு:
நமக்கு என்ன வயது ஆகியிருந்தாலும், உடலுக்கு உழைப்பு கொடுப்பது என்பது மிகவும் அவசியம் என்கிறார் ஹினோஹோரா. சிம்பிளாக வாக்கிங் செய்வது, படிகளை பயன்படுத்துவது, மெதுவான உடற்பயிற்சிகள் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டுமாம். இதனால், உடல் நெகிழ்வு தன்மையுடன் இருந்து, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இயங்குமாம்.
டயட்:
நீங்கள் பயப்படும் படியான ஸ்ட்ரிக்ட் டயட் எதுவும் கிடையாது. ஹினோரா, பெரும்பாலும் மீன், அரிசி சாதம், மெல்லிய புரதம் நிறைந்த இறைச்சி ஆகியவற்றை எடுத்துக்கொள்வாராம். இவர் ‘ஹரா ஹாச்சி பூ’ எனும் முறையை பின்பற்றுகிறார். இதற்கு அர்த்தம், வயிறு 80% முழுதாகும் வரை சாப்பிட வேண்டும் என்பதாம். இவர், அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்கிறாராம்.
வாழ்வின் நோக்கம்:
நாம், ஒரு நோக்கத்துடன் வாழ்ந்தால் கண்டிப்பாக நமது வாழ்நாள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதையேத்தான் மருத்துவர் ஹினோஹராவும் நம்புகிறார். தினமும், ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு நாம் எழுந்துக்கொள்ள வேண்டுமாம். அது நாம் செய்யும் வேலையாக இருக்கலாம், பிறருக்கு உதவுவதாக இருக்கலாம், பிடித்த விஷயங்களை செய்வதாக அல்லது எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்பதாக கூட இருக்கலாம். நாம், வாழ்வில் என்ன செய்தாலும் அமைதியாக உட்காராமல், ஏதாவது ஒரு நோக்கத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமாம். இது ஆயுளை அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.
ஆரோக்கியம்:
நாம், உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், ஒரு சிறு சளி, தும்மல் வந்தால் கூட, அது குறித்து பெரிதாக யோசித்து நேரத்தை வீணாக்க கூடாது என்கிறார் மருத்துவர் ஹீனோஹாரா. நம் உடல் மீது நம்பிக்கை வைத்து, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றினாலே எதுவும் வராது என்கிறார் ஹினோஹாரா. ஆரோக்கியம் குறித்து அதிகமாக யோசித்தால் அது தேவையற்ற மன அழுத்தத்தைகொடுத்து, அதுவே ஒரு புறம் நம் உடலை பாதிக்கும் என்கிறார்.
ஆன்மாவிற்கு தீனி:
நாம் உடலுக்காக/பசிக்காக உணவு அருந்துகிறோம். அதே போல, ஆன்மாவிற்கும் தீனி போட வேண்டும் என்கிறார் ஹினோஹரா. குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, எதையாவது கற்றுக்கொள்வது, கலை செய்வது, மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்வது என சில நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
மேலும் படிக்க | செல்லப்பிராணியின் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த இந்த செயலை தவறாமல் செய்யுங்கள்!
மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!
பொறுப்பு துறப்பு: மேற்கூரியவை அனைத்தும் காலமான மருத்துவர் ஷிகேகி ஹினோஹாராவின் சொந்த கருத்துகளாகும். இவற்றை ஜீ தமிழ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









