)
Japanese To Improve Memory Power : மனிதர்களாக பிறந்த அனைவருக்கும், மறதி என்பது தீர்க்க முடியாத வியாதியாக இருக்கும். கார் சாவியை மறப்பதிலிருந்து, முக்கியமான தகவல்களை மறப்பது வரை மறக்கும் விஷயத்தில் நம்மை யாரும் அடித்துக்கொள்ள முடியாது. இதை தீர்க்க ஒரு வழி இருக்கிறது. ஜப்பானிய முறைப்படி சில டிப்ஸ்களை பின்பற்றினால் நாம், நினைவுத்திறனை வளர்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக ஒரு விஷயத்தை பாரம்பரிய முறைப்படி படித்து நம்மால் நினைவில் வைத்துக் கொள்வது கடினமானதுதான். அதற்கு பதிலாக நமது படைப்பாற்றலை உபயோகப்படுத்தி, கடினமான விஷயங்களை மைண்ட் மேப் போல ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். பின்னர் அந்த விஷயத்தைப் பற்றி நினைக்கும் போது, அந்த மைண்ட் மேப் நினைவிற்கு வரும். அப்படியே அனைத்து விஷயங்களையும் நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.
ஒரு நினைவுத்திறனை வைத்து அதோடு தொடர்பு படுத்தி இன்னொரு விஷயத்தை நினைவில் கொள்வதற்கு பெயர்தான், Mnemonics. உதாரணத்திற்கு உங்களுக்கு கடினமாக தோன்றும் ஏதோ ஒரு டாபிக்கை நினைவில் கொள்வது என்பது கடினமாக இருந்தால், அதோட தொடர்பு படுத்தி ஒரு சிறிய விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம். அப்படி இருக்கையில் நாம் அந்த விஷயத்தை recall செய்தாலே பெரிய விஷயமும் ஞாபகம் வந்துவிடும்.
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள்:
ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் நமது வாயால் திரும்ப உச்சரித்து, அதை படித்துப் பார்த்தால் அது கண்டிப்பாக நினைவில் இருக்கும். ஒன்றுமே புரியாமல் அப்படியே மனப்பாடம் செய்வதற்கு பதிலாக, ஒருவர் முறை படிக்கும் போதும் அதைப் பற்றி புதிய புரிதல் உண்டாகும் அளவிற்கு படிக்க வேண்டும். இது நினைவு திறனை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகளும் கூறுகின்றன.
காட்சி கருவிகள்:
புரிதலை அதிகரிக்க, நினைவாற்றலை மேம்படுத்த, ஆட்சிக்கருவிகள் உதவும். பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு கடினமாக தோன்றும் தகவல்களை, ஒரு காட்சி பொருளாக வைத்து ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். இதை நினைவுபடுத்தும் போது, அந்த காட்சி மட்டுமின்றி அந்த காட்சிக்கு ஒரு விஷயமும் உங்களுக்கு ஞாபகம் வந்துவிடும்.
நினைவுகளை பத்திரப்படுத்தும் திறன்:
பல நூற்றாண்டுகளாக பயனில் இருக்கும் ஒரு முறை இது. உங்கள் வீடு அல்லது உங்களுக்கு பழக்கமான ஒரு இடத்தில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்கிற விஷயத்தை பத்திரப்படுத்துவது போல காட்சிப்படுத்தி கொள்ளுங்கள். அப்படி செய்கையில், நீங்கள் உங்கள் Safe Spaceற்கு சென்று தேவையான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ