சிரித்துக்கொண்டே இருப்பவர்களிடம் சோகம் அதிகமாக இருக்கும்! ஏன் தெரியுமா?

Why People  Smile The Most Have Pain In Life : எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் மனதில், எப்போதும் ஒரு சோகம் ஒட்டிக்கொண்டே இருக்குமாம். அது ஏன்?

Written by - Yuvashree | Last Updated : Mar 5, 2025, 05:45 PM IST
  • துன்பத்திலும் சிரிப்பவர்கள்..
  • அவர்களிடம் இருக்கும் குணாதிசயம்..
  • இதற்கான காரணங்கள்..
சிரித்துக்கொண்டே இருப்பவர்களிடம் சோகம் அதிகமாக இருக்கும்! ஏன் தெரியுமா?

Why People  Smile The Most Have Pain In Life : நம்மை சுற்றி இருப்பவர்களில் சிலர், அல்லது உங்களுக்கு நெருக்கமான நண்பரே கூட, வாழ்வில் என்ன சோகம் வந்தாலும், எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், நீங்கள் அவர்களின் வாழ்க்கை கதையை கேட்டுப்பார்த்தால் அவ்வளவு கடினமானதாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள், இவ்வளவு சோகமான விஷயங்கள் தங்களது வாழ்வில் நடக்கும் போது எப்படி சிரித்துக்கொண்டிருக்கன்றனர் என கேட்க தோன்றும். அவர்கள், எப்படி இப்படி சிரித்துக்கொண்டே இருக்கின்றனர் தெரியுமா?

Add Zee News as a Preferred Source

தன்னால் யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணம்..

இப்படி சோகத்திலும் சிரித்துக்கொண்டே இருப்பவர்கள், தங்களுடைய பிரச்சனையை தங்களுக்கானதாக மட்டுமே பார்ப்பார்கள். இந்தப் பிரச்சினையை பிறரிடம் சொல்லி அவர்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்று நினைப்பர். இதனால் நாங்கள் என்ன கடினமான தருணங்களில் இருந்தாலும் அதனை ஒரு சிறு புன்னகையுடன் மறைத்து விடுவர். இதனால் இவர்களுக்குள் என்ன பிரச்சனை இருக்கிறது, இவர்கள் உண்மையாகவே என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்பது அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது.

தற்காத்துக் கொள்ளும் முறை:

நாம், சோகமாக இருக்கும் போது அதிலிருந்து தப்பிக்க, சில விஷயங்களை தற்காப்பு முறைகளாக பின்பற்றுவோம்.  இதற்குதான் defence mechanism என்று பெயர். உணர்ச்சி ரீதியாக மிகவும் அடிவாங்கியிருக்கிறோம் என்பதை காண்பித்துக்கொள்ளாமல் இருக்க, இவர்கள் சிரிப்பதை ஒரு தற்காப்பு முறையாக பயன்படுத்துவர். தாங்கள் பலவீனமானவர் இல்லை என்பதை காண்பிக்க இவர்கள் இம்முறையை பின்பற்றுவர்.

உணர்ச்சி அழுத்தம்:

தன் மனதுக்குள் என்ன வலி இருக்கிறாதோ, அதனை இவர்கள் பார்க்க மாட்டார்கள். அதற்கு மாறாக அதை மறைக்க ஒரு சிறு புன்னகையை எப்போதும் பதிலாக வைத்திருப்பர். இதனால், பிறருக்கு இவர்கள் வலியில் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடும். இப்படி, இவர்கள் தங்கள் மனதில் இருக்கும் உணர்ச்சிகளை சரியாக உணராமல் போட்டு அழுத்துவதால் அது பின்னர் பெரிய பிரச்சனையாக வெளிபடும்.

பாசிடிவிட்டி:

துன்பம் வரும் வேளையிலும் அழாமல் சிரித்தால் தான் ஒரு பாசிடிவான மனிதராக இருக்கலாம் என இவர்கள் நினைத்துக்கொள்கின்றனர். இதனால், தன் மனதும் ஆறுதல் அடையும் என்று நினைக்கின்றனர். கவலையாக இருக்கும் போது அதனை மறைக்க சிரித்து தன்னை மகிழ்ச்சியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்றும் நினைக்கின்றனர். உண்மையில் இது அவர்களை இன்னும் சோகமாக்கும்.

முன்னர் பார்த்த துன்பம்:

ஒருவர், எந்த துன்பம் நேர்ந்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கிறார் என்றால் அவர் இதற்கு முன்னர் அதை விட பெரிய துன்பங்களை கடந்து வந்திருக்கிறார் என அர்த்தம். தங்களின் சோகங்களை மறைக்க இது போன்ற சிரிப்பு மாஸ்கை அவர்கள் போட்டுக்கொள்வதுண்டு. தனது வலியை பிறர் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம்தான் இவர்களை இப்படி சிரிக்க வைக்கிறது.

பிறருக்கு மகிழ்ச்சி கொடுக்க..

பிறரை மகிழ்வித்தே ஒருவர் பழகி விட்டார் என்றால் அவரால் பிறர் எதிரில் சோகமாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், தன்னை வினோதமாக பார்ப்பார்களோ என்ற பயத்தினாலேயே இவர்கள், தனது உணர்வுகளை மறைத்து தன்னை மகிழ்ச்சியான மனிதராக காட்டிக்கொள்கின்றனர்.

மேலும் படிக்க | எடை சட்டுன்னு குறைய அரிசிக்கு பதில் ‘இதை’ சாப்பிடலாம்!

மேலும் படிக்க | நடிகை ஸ்ரீதேவியின் பியூட்டி சீக்ரெட்ஸ்! அந்த காலத்தில் அவர் செய்த சிம்பிள் விஷயங்கள்..

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News