MP-யில் 74 வயது தாத்தாவின் தலையில் முளைக்கும் "பிசாசின் கொம்பு"...

மத்திய பிரதேசத்தில் உள்ள 74 வயது தாத்தாவிற்கு தலையில் பேய் கொம்பு முளைத்துள்ளது!!

Last Updated : Sep 15, 2019, 07:41 PM IST
MP-யில் 74 வயது தாத்தாவின் தலையில் முளைக்கும் "பிசாசின் கொம்பு"... title=

மத்திய பிரதேசத்தில் உள்ள 74 வயது தாத்தாவிற்கு தலையில் பேய் கொம்பு முளைத்துள்ளது!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ராகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சியாம் லால் யாதவ். சுமார் 74 வயதான இவருக்குச் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டு அது சரியாகிப் போன சில நாட்களில் காயம் ஏற்பட்ட அதே இடத்தில் சிறிதாகக் கொம்பு ஒன்று முளைத்தது. அதை முதலில் இவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கையால் உடைத்துவிட்டுக்கொண்டே இருந்துள்ளார். 

இது போகப் போக சரியாகிவிடும் என நினைத்துள்ளார். ஆனால், அது சரியாகவில்லை. இதையடுத்து, அவர் டாக்டரை அணுகி இது குறித்துக் தெரிவித்துள்ளார். தலையில் கொம்பு முளைப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இதை ஆய்வு செய்தனர்.  அப்போது, சியாம் லாலிற்கு மிக அரிய வியாதியான பிசாசு கொம்பு வியாதி இருப்பது தெரியவந்தது. மருத்துவ ரீதியாக செபசீகஸ் கொம்பு எனச் சொல்லப்பட்டாலும் பரவலாக இதை Devil’s horn (பேய் கொம்பு) என்றே அழைக்கப்படுகிறது.

இந்த பேய் கொம்பு குறித்து அமெரிக்காவில் முன்னர் ஒரு ஆய்வு நடந்துள்ளது. அதில் அவர்கள் இந்த வியாதி சிலருக்கு அதுவும் நேரடியாகச் சூரிய வெளிச்சம் தோல் பகுதியில் படும் போது ஏற்படும் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.  

 

Trending News