ஆதார் செயலி வந்தாச்சு... மத்திய அரசு கொடுத்த குட் நியூஸ்..! முழு விவரம்

Aadhaar App ; மத்திய அரசு ஆதார் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 9, 2025, 10:05 AM IST
  • ஆதார் கார்டு லேட்டஸ்ட் அப்டேட்
  • புதிய செயலியை அறிமுகப்படுத்திய மத்திய அரசு
  • இனி ஆதார் நகல் தேவையே இல்லை
ஆதார் செயலி வந்தாச்சு... மத்திய அரசு கொடுத்த குட் நியூஸ்..! முழு விவரம்

Aadhaar App News : பிரதமர் நரேந்திர மோடி அரசு ஒரு புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் ஆதார் தொடர்பான தகவல்களை ஆதார் அட்டை ஒரிஜினல் அல்லது புகைப்பட நகல்கள் இல்லாமலேயே சரிபார்த்து கொள்ள முடியும். தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே சமூக ஊடக தளமான X-ல் இது குறித்த தகவல்களை வழங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

X-ல் வெளியிடப்பட்ட வீடியோ, இந்த செயலி மூலம் முக அடையாளம் காட்டினாலே, ஒருவரின் ஆதார் தகவல்களை சரிபார்ப்பதற்கான அங்கீகாரம் சாத்தியமாகும் என்பதையும், ஆதார் கார்டு வைத்திருப்பவரின் ஒப்புதலுடன் தரவு பாதுகாப்பான முறையில் பகிரப்படும் என்பதையும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த செயலி பீட்டா சோதனை கட்டத்தில் உள்ளது, இது ஆதார் சரிபார்ப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. இது பயனர்களின் பிரைவசியை பாதுகாப்பதுடன் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்.

புதிய ஆதார் செயலியின் 10 அம்சங்கள்

1. புதிய ஆதார் செயலி வந்தால் பொதுமக்கள் இப்போது தங்கள் விருப்பப்படி தேவையான தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும், இதனால் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

2. UPI கட்டணத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்வது போல, ஆதார் சரிபார்ப்பு இப்போது எளிதாக இருக்கும்.

3. இப்போது ஆதாரின் நகல் அல்லது ஸ்கேன் தேவையில்லை, அனைத்தும் செயலி மூலம் செய்யப்படும்.

4. மொபைல் செயலியில் முக அடையாளம் மூலம் லாகின் மற்றும் சரிபார்ப்பு வசதி உள்ளது, இதன் காரணமாக பாதுகாப்பு மேலும் அதிகரிக்கிறது.

5. இப்போது ஹோட்டல்கள், கடைகள் அல்லது பயண சோதனைச் சாவடிகளில் ஆதார் நகலை வழங்க வேண்டிய அவசியமில்லை.

6. 100% டிஜிட்டல் மற்றும் உங்கள் அடையாளம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.

7. இந்த செயலி மூலம், ஆதார் அட்டை தொடர்பான தரவு தவறாகப் பயன்படுத்துதல் அல்லது கசிவு ஏற்படும் அபாயமும் குறைக்கப்படும்.

8. ஆதார் தகவல்களை சேதப்படுத்துதல் அல்லது எந்த வகையான மோசடியும் இப்போது சாத்தியமில்லை.

9. ஆதார் சரிபார்ப்பு மிகக் குறுகிய காலத்திலும் எளிதான வழியிலும் செய்யப்படும்.

10. பழைய முறைகளுடன் ஒப்பிடும்போது, பயனாளர்களின் பிரைவசி இதில் மிக மிக பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | விவசாயிகள் ஆதார் கார்டை போன்ற தேசிய அடையாள எண் ஏன் கட்டாயம் பெற வேண்டும்?

மேலும் படிக்க | PVC ஆதார் அட்டை உங்கள் வீடு வந்து சேரும்... விண்ணப்பிக்கும் எளிய முறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News