ஆதார் கார்டு இனி எடுப்பது ஈஸி... விரைவில் வருகிறது புதிய அப்டேட்

Aadhaar card : ஆதார் கார்டு அங்கீகாரம் தொடர்பாக மத்திய அரசு புதிய போர்ட்டலை தொடங்குகிறது. இது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்வோம். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Feb 28, 2025, 03:35 PM IST
  • ஆதார் கார்டு லேட்டஸ்ட் அப்டேட்
  • புதிய போர்டல் தொடங்குகிறது மத்திய அரசு
  • ஆதார் தரவு அங்கீகாரத்தை பெறுவது இனி ஈஸி
ஆதார் கார்டு இனி எடுப்பது ஈஸி... விரைவில் வருகிறது புதிய அப்டேட்

Aadhaar card News : இந்தியாவில் இப்போது ஆதார் கார்டு பிரதான ஆவணமாக மாறிவிட்டது. ரேஷன் கார்டு முதல் பாஸ்போர்ட் வாங்குவது வரை எடுப்பதற்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டு சேவையை இன்னும் எளிதாக்கும் வகையில் ஒரு மிகப்பெரிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. விரைவில் ஆதார் அங்கீகாரம் பெறுவதற்காக மத்திய அரசு புதிய வெப்சைட் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Zee News as a Preferred Source

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MEITY) தகவல்படி, இந்த போர்டல் ஆதாரை மேலும் யூசர் பிரண்ட்லியாகவும், வாழ்க்கையை எளிதாக்கவும், மக்களுக்கான சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும் வகையில் இந்த வெப்சைட் இருக்கும். UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் கூறுகையில், ஆதார் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்தை அதிகரித்து வருகிறது. விதிகளின்படி நிறுவனங்கள் தங்களின் திட்டங்களை சமர்ப்பிப்பதையும் அங்கீகரிப்பதையும் எளிதாக்குவதற்காக Aadhaar Good Governance Portal உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அப்டேட் நியூஸ்

உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் ஐடி ஆக ஆதாரை இந்தியா உருவாக்கியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் ஆதார் ஐடி கார்டு பெற்றிருப்பதுடன் அதன் நம்பகத்தன்மை குறித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகைய ஆதார் கார்டில் சேவையில் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய மாற்றம் சேவை வழங்குநர் மற்றும் பெறுநர் இருவரும் நம்பகமான பரிவர்த்தனைகளைச் செய்ய உதவும் என்று மத்திய அமைச்சகம் கூறுகிறது.

இந்த போர்டல் ஒரு ஆதார வழிகாட்டியாக செயல்படும். ஆதார் அங்கீகாரத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் எவ்வாறு சேருவது என்பது குறித்த அங்கீகாரத்தைத் தேடும் நிறுவனங்களுக்கு விரிவான SOPகளை வழங்கும். முக (Facial) அங்கீகாரத்தை தனியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர் செயலிகள் வழியாகவே ஒருங்கிணைக்க முடியும், இது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அங்கீகாரத்தை செயல்படுத்தும்.

இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஆதார் கார்டு அங்கீகாரத்தை பயன்படுத்தும் வழிமுறையை அண்மையில் மத்திய அரசு தனியாருக்கு கொடுத்தது. அந்த நிறுவனங்கள் புதிதாக மத்திய  அரசு உருவாக்கியிருக்கும் போர்டல் மூலம் ஆதார் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள விண்ணப்பித்து, தரவுகளை பெற்றுக் கொள்ளலாம். அதற்காக கொண்டு வரப்பட்டிருப்பது தான் Aadhaar Good Governance Portal. சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். 

 

மேலும் படிக்க | EPFO புதிய வட்டி விகிதம் வெளியானது: வந்தது முக்கிய அறிவிப்பு... அதிக வட்டி கிடைக்குமா?

மேலும் படிக்க | மார்ச் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி சிலிண்டர், அகவிலைப்படி, UPI, FD விதிகள்.... முழு லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News