ஏசி என்பது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதை அதிகம் நம்பியிருக்கும் கோடை மாதங்கள் தற்போது தொடங்கி உள்ளன. இன்றைய கோடை வெயிலை சமாளிக்க, வசதியான தூக்கத்தை பெற ஏர் கண்டிஷனிங் அவசியம். பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போல ஏசியும் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறி உள்ளது. இருப்பினும் ஏசி வாங்குவதை விட, வெப்பநிலை அதிகரிக்கும் போது அவற்றின் பராமரிப்பை இன்னும் முக்கியமானதாக உள்ளது. தினசரி ஏர் கண்டிஸ்னரை பயன்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் அவற்றை சுத்தமாக வைத்துகொள்ள்ள வேண்டிய அவசியம்.
ஏன் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்?
உங்கள் வீட்டில் உள்ள ஏசியில் இருந்து வரும் காற்று சுத்தமாகவும், புதியதாகவும், தீங்கு விளைவிக்கும் அசுத்தங்கள் இல்லாததாகவும் இருப்பதை உறுதி செய்ய அவற்றை சுத்தம் செய்வது அவசியமாகும். காலப்போக்கில், உங்கள் ஏசி யூனிட்டில் உள்ள வடிகட்டிகள் தூசி, மகரந்தம் மற்றும் பாக்டீரியாவை சேகரிக்கலாம். இது உங்கள் உட்புற காற்றின் தரத்தையும், அதன் விளைவாக உங்கள் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும். உஷ்ணத்தில் தத்தளிக்கும் வெயில் காலத்தின் போது, ஏசியில் ஏதேனும் பழுது ஏற்படாமல் இருக்க அவற்றை சரியாக சுத்தம் செய்வது புத்திசாலித்தனம்.
நீங்களாகவோ அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடனோ ஏசியில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து, அவை பெரிய சிக்கல்களாக மாறுவதற்கு முன்பு அவற்றைச் சரிசெய்ய வேண்டும். உங்கள் ஏர் கண்டிஷனிங் யூனிட்டை வருடத்திற்கு மூன்று முதல் நான்கு முறை சர்வீஸ் செய்வது நல்லது. நீங்கள் நகர்ப்புற அல்லது தொழில்துறை சூழலில் வசிக்கிறீர்கள் என்றால், அங்கு மாசு அளவுகள் மற்றும் தூசி அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கும் உங்கள் ஏசியை சர்வீஸ் செய்வது அதன் ஆயுளை நீட்டித்து, உங்கள் ஏசியின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும்.
ஏசியின் முக்கிய பராமரிப்பு பணிகளில், மாதாந்திர அடிப்படையில் அதன் வடிகட்டிகளை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும், ஏனெனில் இது உகந்த காற்றோட்டம் மற்றும் செயல்திறனை பராமரிக்க முக்கியமானது. குளிரூட்டும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் ஏசி கேஸ் அளவை சரிபார்ப்பது முக்கியம். உங்கள் ஏசியின் சுருள்கள் மற்றும் துடுப்புகள் தூசி மற்றும் குப்பைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது மற்றொரு இன்றியமையாத பணியாகும், ஏனெனில் இது யூனிட்டின் செயல்திறனை பெரிதும் மேம்படுத்தும். மேலும், வடிகால் குழாயின் அடைப்புகளை ஆய்வு செய்வது, உங்கள் வீட்டில் நீர் சேதம் மற்றும் நச்சு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் கசிவுகளைத் தடுக்க மிகவும் முக்கியமானது. வழக்கமான பராமரிப்பு செய்வதன் மூலம், உங்கள் ஏர் கண்டிஷனிங் யூனிட்டின் ஆயுட்காலத்தை நீடிப்பது மட்டுமல்லாமல், அதன் செயல்திறனில் மேம்பாடு மற்றும் குறைந்த கரண்ட் பில்லை கொண்டு வரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









