8 மாதங்களில் 42 கிலோ எடையை குறைத்த அஜித்! ‘இந்த’ உணவை மட்டும் சாப்பிட்டாராம்..

Actor Ajith Kumar Weight Loss Tips : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், அஜித் குமார். இவர், சமீபத்தில் உடல் எடை குறைந்தார். இதற்கு உதவிய விஷயங்கள் குறித்து அவரே பேசியிருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : May 17, 2025, 08:37 AM IST
  • அஜித் குமார் வெயிட் லாஸ் டிப்ஸ்
  • சாப்பிட்ட கட்டுப்பாடான உணவு
  • செய்த உடற்பயிற்சிகள்
8 மாதங்களில் 42 கிலோ எடையை குறைத்த அஜித்! ‘இந்த’ உணவை மட்டும் சாப்பிட்டாராம்..

Actor Ajith Kumar Weight Loss Tips : கோலிவுட்டில், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருப்பவர் அஜித் குமார். இவர் தனது நடிப்புக்காக மட்டுமின்றி, தனக்கு பிடித்த விஷயங்களை தயக்கம் இன்றி செய்வதற்காகவும் பெயர் பெற்றவர். ஆரம்பத்திலிருந்து மோட்டார் வாகனங்களின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர், அடிக்கடி கார் மற்றும் பைக் ரேஸ்களில் கலந்து கொள்வார். இதனால் அவருக்கு பலமுறை அடிபட்டு அறுவை சிகிச்சைகளும் நடந்து இருக்கிறது. இருப்பினும் 50 வயதை கடந்த பின்பும், விடாமுயற்சியுடன் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஷூட்டிங் இல்லாத சமயங்களில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதோடு, தன் மனதிற்கு இன்பம் தரும் விஷயங்களையும் செய்வார். அப்படி அவர் சமீபத்தில் துபாய் கார் பந்தயத்தில் கலந்து கொண்டார்.

உடல் எடை குறைந்த அஜித்!

நடிகர் அஜித், துபாய் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட போது உடல் எடை மெலிந்து காணப்பட்டார். இதையடுத்து அஜித்திற்கு ஏதோ உடல்நிலை சரி இல்லை என பல நினைத்துக் கொண்டனர். ஆனால் உண்மையில், இந்த கால்பந்தயத்தில் கலந்து கொள்ள உடல் தகுதி தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக மட்டுமே அஜித் உடல் எடை குறைந்து இருக்கிறார். அஜித், தண்ணீர் மட்டுமே குடித்து உடல் எடையை குறைந்ததாகவும், இதற்கென்று கடுமையான டயட் இருந்ததாகவும் பலர் கூறி இருந்தனர். இப்போது அவரே, தான் உடல் எடையை குறைத்ததற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை உடைத்திருக்கிறார். இதுகுறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

உணவுமுறை:

அஜித் குமார் தனது உடல் எடை குறைப்பு ரகசியம் குறித்து, ஒரு நீர் கனலில் பேசியிருக்கிறார். அதில் தனக்கு கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உடற்பகுதி தேவைப்பட்டதாகவும் ஆகையால் 8 மாத காலத்தில் கிட்டத்தட்ட 42 கிலோ எடையை குறைத்ததாகவும் கூறியிருக்கிறார். அஜித், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல் எடை குறைப்பு பணியை தொடங்கியதாக கூறியிருக்கிறார். இதற்காக தான் பாலோ செய்த டயட் மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து பேசி இருக்கிறார். அவர் முக்கியமாக கூட்டு உணவு முறையை எடை குறைப்புக்காக தேர்ந்தெடுத்து இருக்கிறார். 

கூட்டு உணவு முறை என்றால் ஆங்கிலத்தில் ஜாயிண்ட் டயட் என்று அர்த்தம். இதில் பெரும்பாலும் செர்ரி, பெர்ரி, அண்ணாச்சி பழம், பிரக்கோலி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளும் பழங்களும் அடங்கும். அதிலும் அந்த உணவுகளை அவர் கட்டுப்பாடுடன் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நீச்சல் பயிற்சி..

உடல் எடையை குறைப்பதற்காக அஜித் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் இருக்கும் கொடுப்புகள் கரைந்து, பசி வளர்ச்சிக்கும் உதவும் என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் இருக்கும் மெட்டபாலிசம் அதிகரித்து, கல்லூரிகளும் குறையும். இதையே அஜித் உடல் எடையை குறைப்பதற்காக பாலோ செய்திருக்கிறார். 

சைக்கிள் ஓட்டுதல் 

உடல் எடையை குறைக்க சைக்கிள் ஓட்டுவதும் ஒரு நல்ல பயிற்சியாகும். இதுவும் குடலில் இருக்கும் கலவைகளை குறைத்து, உடலில் பல்வேறு தசை வளர்ச்சிக்கும் உதவும். இது குறைந்த வகையான கார்டியோ உடற்பயிற்சியாகும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும் என கூறப்படுகிறது. 

அஜித் சேத மாற்றங்கள்..

நடிகர் அஜித் உடல் எடையை குறைப்பதற்காக சுத்தமான டீடோட்டலராக மாறிவிட்டாராம். அதுமட்டுமின்றி அசைவ உணவுகளை தவிர்த்து மொத்தமாக வெஜிடேரியனாகவும் மாறிவிட்டதாக கூறியிருக்கிறார். இந்த பந்தயத்திற்காக தனது இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டிய இடத்தில் இருந்ததால் அவர் இதை செய்ததாக கூறியிருக்கிறார். மேலும் இதை தான் தொடர்ந்து செய்ய இருப்பதாகவும், பந்தயத்திற்காக தனது படப்பிடிப்புகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார். இதற்காகத்தான் தன் உடலை தொடர்ந்து பராமரித்து வருவதாக பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க |4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..

மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்ய பாவனா செய்த விஷயம்! மாதத்திற்கு 2-3 முறை ‘இதை’ செய்வாராம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News