Suriya Six Pack Weight Loss Tips : தமிழ் திரையுலகில், விஜய் நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர், நடிப்புக்காக மட்டுமல்ல தனது உடலை கட்டுக்கோப்பாக பார்த்துக் கொள்வதற்கும் பிட்டாக இருப்பதற்கும் பிரபலமான ஆள். தமிழில் உள்ள நடிகர்கள் அனைவருமே வெயிட் போடாமல் உடலை பார்த்துக் கொள்வார்கள் என்றாலும், சூர்யாதான் சிக்ஸ் பேக்கிற்கு பிரபலமான ஆளாக இருந்தார். குறிப்பாக, வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் தனது உடற்கட்டை காட்டி பறந்து பறந்து சண்டை இடும் பைட் காட்சிகளுக்காகவே படங்கள் ஓடியது.
இளம் வயதில் இருக்கும்போது யாரால் வேண்டுமானாலும், சிக்ஸ் பேக்ஸ் வைக்க முடியும். ஆனால் வயதான பின்பு அது சிரமம் ஆகிவிடும். ஆனால் கங்குவா படத்தில் ஒரு சண்டை காட்சிக்காக, சூர்யா சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து ஒரு நேர்காணலில் அவரே பேசியிருக்கிறார்.
சூர்யாவின் சிக்ஸ் பேக்..
கங்குவா பட காட்சியில், இடம்பெற்றிருந்து சிக்ஸ் பேக் குறித்து பேசிய அவர், “30 வயதில் இருக்கும்போது சிக்ஸ் பேக் வைப்பது என்பது ஒரு நேரான பாதையில் ஓடுவது போல இருந்தது. ஆனால் இப்போது எனக்கு 49 வயது ஆகிறது. இந்த வயதில் சிக்ஸ் பேக் வைப்பது ஒரு மலையை ஒரு போல இருக்கிறது. இந்த வயதில், மெட்டபாலிசம் குறையும். இதனால் அதிக அளவில் கார்டியோ செய்ய வேண்டியது இருக்கும். டயட்டில் இன்னும் ஸ்ட்ரிட்டாக இருக்க வேண்டும். படப்பிடிப்பில் இருக்கும் போது, நான் ஒரு 100 நாள் பிளானை பின்பற்றினேன். அதை வைத்து தான் சிக்ஸ் பேக் என்னால் வைக்க முடிந்தது” என்று கூறியிருக்கிறார்.
100 நாள் பிளான்:
சூர்யாவின் இந்த 100 நாள் டயட் பிளான் குறித்து ஒரு பிரபல மருத்துவர் பேசியிருக்கிறார். 49 வயதில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் கூறியிருக்கிறார். இந்த வயதில் மெட்டபாலிசம் குறைவதால் அது வெயிட்டையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டார்.
“டயட்டை சரியாக பேலன்ஸ் செய்து, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றினால் நீண்ட காலத்திற்கு உடல் எடை மேலாண்மையை பின்பற்றலாம்” என்று அவர் கூறியிருக்கிறார்.
சூர்யாவின் இந்த 100 நாள் பிளான் குறித்து பேசியவர், அதிக புரதம் நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்படாத முழு தனியா உணவுகள், கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகள் இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது என்றும் கூறியிருக்கிறார். மேலும், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காத உணவுகள், சீட்-டேவிலும் என்னை சேர்க்காத உணவுகளை எடுத்துக் கொள்வது போன்ற காரணங்கள், அவர் சிக்ஸ் பேக் வைக்க உதவி செய்துள்ளது.
இது, சூர்யாவிற்கு ஏற்ற டயட்டாக இருந்திருக்கும் என்று கூறிய அந்த மருத்துவர், அவரவர் உடலுக்கு ஏற்ப இது மாறும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல, சாதரணமான லைஃப்ஸ்டைலை பின்பற்றுபவர்கள், திடீரென இந்த டயட்டை பின்பற்றினால் அது உதவாது என்றும் அந்த மருத்துவர் கூறியிருக்கிறார். அதே போல, உடலுக்கு ஏற்றவாறு சரியான உடற்பயிற்சிகளை செய்வதும் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 8 மாதங்களில் 42 கிலோ எடையை குறைத்த அஜித்! ‘இந்த’ உணவை மட்டும் சாப்பிட்டாராம்..
மேலும் படிக்க | உறங்கும் போது சரசரன்னு முடி வளரனுமா? ‘இதை’ செய்யுங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ