Actress Tabu Weight Loss Tips : இந்திய திரை உலகில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர், தபு. பெரும்பாலும் இந்தி படங்களிலேயே நடித்திருந்தாலும் இவருக்கு தமிழ் பெரிய அளவுக்கு ரசிகர் கூட்டம் அதிகம். இவருக்கு பலர் ரசிகர்களாக மாறியது, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பிறகுதான். அந்த படத்தில் சௌமியா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவரை பல பெண்கள் தங்களது ரியல் வாழ்க்கையை திரையில் காட்டுவதாக நினைத்துக் கொண்டனர்.
திரையுலகில் இருக்கும் அனைவரும் தங்களது உடலை அன்பும் அக்கறையுமாக காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். காரணம் அவர்கள் எப்போதும் கேமரா முன் இருப்பது தான். ஆனால் ஒரு 45 வயது கடந்து விட்டால் அந்த அக்கறை சிலருக்கு இல்லாமல் போய்விடும். ஆனால் நடிகை தபு திரை உலகத்திற்கு வந்தபோது எப்படி மெல்லிய இடையுடன் இருந்தாரோ இப்போதும் அதேபோல் இருக்கிறார். இவர் தன் உடலை மெல்லியதாக பார்த்துக் கொள்ள செய்யும் விஷயங்கள் என்ன தெரியுமா?
காலையில் குடிக்கும் பானம்:
அது மட்டுமல்ல உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பல சில இயற்கை பானங்களை குடிப்பதுண்டு. தபுவிற்கு அப்படி பிடித்த பானங்களில் ஒன்று டீ (தேனீர்). காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக குடிப்பது இதைத்தானாம். அதிலும் குறிப்பாக அவர் விரும்பி குடிப்பது இஞ்சி டீ எனக் கூறப்படுகிறது. இந்த வகை டீ, செரிமானத்தை வேகமாக்குவதோடு, உடல் எடையை ஏறாமலும், எடை ஏறினால் அதனை குறைக்கவும் வழிவகுக்குகிறது.
அதுபோல இரவில் உறங்குவதற்கு முன்பும் தமிழ் ஒரு பானத்தை குடிக்கிறார். அது, Chamomile tea என்பதாகும். இது சீமை சாமந்தியால் செய்யப்படும் டீ. ஒரு சிலர் இந்த தேநீரை இயற்கையாக வீட்டிலேயே செய்வர். இன்னும் சிலர் இதனை டீ-பேகாக வாங்கி வைத்துக் கொள்வர்.
ஒல்லியாக இருப்பதன் காரணம்:
ஒருவர் இயற்கையாகவே ஒல்லியாக இருக்கு காரணம், அவரது மரபணுவாக இருக்கலாம். தபுவுக்கு ஒல்லியான தேகம் என்பது, அவரது மரபணுவிலேயே வந்ததாக இருக்கலாம். தபு கிட்டத்தட்ட பார்த்ததற்கு அவரது தாய் போலவே இருப்பார். அவரது தாயும் இவரைப்போல உயரமாகவும் ஒல்லியாகவும் இருப்பார். அது மட்டும் கிடையாது, தபு சிறுவயதில் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கை பழக்க வழக்கங்களுக்கு தன்னை பழக்கிக் கொண்டவர். இதனாலும் இவருக்கு வெயிட் ஏறவில்லை.
உணவு கட்டுப்பாடு..
பொதுவாக யாரேனும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான முயற்சிகள் பன்மடங்காக இருக்கும். உணவு கட்டுப்பாடு, எடுத்துக்கொள்ளும் உனது அளவு குறைத்தல் உன்னிடம் விஷயங்களை செய்வர். மேலும், தங்களுக்கு பிடித்த உணவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு ஹெல்தியாக மட்டும் சாப்பிடுவர். இந்த விஷயத்தில் தபுவுக்கு நம்பிக்கை இல்லையாம். தனக்கு பிடித்த உணவை சாப்பிடுவதற்கு அனைவருக்கும் உரிமைய இருக்கிறது என்று கூறும் அவர், அதை அளவுடன் சாப்பிட்டால் போதுமானது என்கிறார்.
தபு விரும்பி சாப்பிடும் எண்ணெயில் பொரித்த உணவு…
சினிமாவில் இருப்பவர்கள் பெரும்பாலும் என்னை உணவுகளை தங்களது டயட் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவர். இதனால் சருமம் மற்றும் எடை பாதிக்கும் என்பதால் இதை செய்வர். ஆனால், நடிகை தபுவுக்கு பிடித்த ஒரு எண்ணெயில் பொறித்த உணவு இருக்கிறது. அது சமோசாதான். இப்போதாவது இதனை தான் விரும்பி சாப்பிடுவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேற்கூறியவை மட்டுமல்ல, தபு, ஏரோபிக் உடற்பயிற்சிகள் மற்றும் சில நேரங்களில் கார்டியோ உடற்பயிற்சிகளையும் செய்வாராம். மேலும், சர்க்கரை மற்றும் எண்ணெயை பெரிதும் எடுத்துக்கொள்ள மாட்டாராம். பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் காட்டமாக நோ சொல்லி விடுவாராம்.
மேலும் படிக்க | எடை ஏறாமல் இருக்க ராஷி கண்ணா செய்யும் விஷயம்! ஒரு நாளும் மிஸ் பண்ண மாட்டாராம்..
மேலும் படிக்க | 73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை!! தினமும் சாப்பிடும் ஒரே வறுத்த உணவு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









