Bhagyashree Chair Exercises To Burn Belly Fat : பொதுவாக அனைவருமே, தங்களின் உடலை ஃபிட் ஆகவும் ஹெல்தியாகவும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி இருந்தால்தான், நம்மால் பல ஆண்டுகளுக்கு கொஞ்சம் இளமையாக தெரியவும், ஆரோக்கியமாக வாழவும் முடியும். அதிலும், தினம் தோறும் கேமரா முன் நிற்கும் நடிகர் நடிகைகள் தங்கள் உடலை பார்த்துக்கொள்வதும் மிகமிக அவசியம். சினிமாவில் அவர்கள் நடிப்பதை நிறுத்திய பின்பும் கூட, அவர்கள் தங்களின் ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளை விடாமல் பின்பற்றுவர். இங்கும், அப்படியொரு 56 வயது பிரபல நடிகை அடி வயிற்று தொப்பையை குறைக்க, உட்கார்ந்து கொண்டே செய்யும் சில உடற்பயிற்சிகளை அவர் கூறியிருக்கிறார். அவற்றை இங்கு பார்ப்போம்.
56 வயது நடிகை:
56 வயதாகும் நடிகை பாக்கியஸ்ரீ, சல்மான் கான் படம் ஒன்றின் மூலம் பிரபலமானவர். இளமை காலத்தில் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த இவர், இப்போதும் கூட தனது உடலை அப்படி ஃபிட்டாக வைத்துக்கொண்டு சிக்கென்று இருக்கிறார். இப்போது, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், செவ்வாய்க்கிழமையில் சில உடல் நல டிப்ஸையும் உடல் எடை குறைக்கும் டிப்ஸையும் கொடுத்து வருகிறார். அப்படி அவர் கொடுத்திருக்கும் டிப்ஸ் ஒன்று குறித்துதான், இங்கு பார்க்க போகிறோம்.
அடிவயிற்று தாெப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள்..
பலருக்கு, தொப்பை என்பது தீராத தலைவலியாக இருக்கும். இதற்கு அதிகம் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது என இப்படி தொப்பை போட பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை குறைக்க சில எளிமையான உடற்பயிற்சிகளும் இருக்கிறது என்று கூறுகிறார், பாக்கியஸ்ரீ. இவர் அப்படி கூறும் 3 உடற்பயிற்சிகள்..
சீட்டட் க்ளாப்ஸ்:
இந்த உடற்பயிற்சியை நாற்காலியில் அமர்ந்து கொண்டே செய்யலாம். நின்று கொண்டு கையை உயர்த்தி, அதனை கீழே இறக்கும் போது முட்டிக்கு கீழ் வைத்து கை தட்டுவோம் அல்லவா? அதே போலத்தான் இதையும் அமர்ந்து கொண்டு செய்ய வேண்டும். இது, உங்களின் அடிவயிற்றில் தங்கியிருக்கும் தொப்பையை கரைத்து, அதனை குறைக்கவும் உதவும்.
எல்போ ட்விஸ்ட்:
இந்த உடற்பயிற்சியை படுத்துக்கொண்டு செய்வோம். இது, உங்களின் அடி வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவுமாம். இது, உங்களது கோர் ஸ்ட்ரெந்தை அதிகரித்து, உடலை நெகிழ்வாக (flexibility) வைத்திருக்க உதவும். இதனை உட்கார்ந்து கொண்டு, கை முட்டியுடன் அதற்கு எதிர் நேராக இருக்கும் இன்னொரு முட்டியுடன் சேர்க்க வேண்டும். இதனால், இடுப்பின் இரு சைடிலும் இருக்கும் தசைகளும் குறையும்.
லெக் ரைஸ்:
இந்த உடற்பயிற்சியை, நாம் அமர்ந்து கொண்டே கால்களை தூக்கி செய்ய வேண்டும். கால்களை நேராக தூக்கும் போது அடி வயிற்றில் இருக்கும் கொழுப்பு எரியும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: மேற்கூறியவை யாவும், நடிகை பாக்கியஸ்ரீயின் தனிப்பட்ட கருத்தாகும். இதற்கு ஜீ மீடியா எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இதனை பின்பற்றும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
மேலும் படிக்க | 20 கிலோ எடையை அசால்டாக குறைத்த குஷ்பு! சீக்ரெட் இது ஒன்னுதான்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ