வெயிட் லாஸ் செய்ய பாவனா செய்த விஷயம்! மாதத்திற்கு 2-3 முறை ‘இதை’ செய்வாராம்..

Actress Bhavana Weight Loss Tips : பிரபல நடிகை பாவனா, 12 வருடங்களுக்கு முன் கொடுத்துள்ள வெயிட் லாஸ் டிப்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 24, 2025, 04:52 PM IST
  • பாவனாவின் வெயிட் லாஸ் டிப்ஸ்
  • உடல் எடையை குறைக்க செய்த விஷயம்..
  • மாதத்திற்கு 2-3 முறை செய்வாராம்..
வெயிட் லாஸ் செய்ய பாவனா செய்த விஷயம்! மாதத்திற்கு 2-3 முறை ‘இதை’ செய்வாராம்..

Actress Bhavana Weight Loss Tips : உடல் எடை குறைப்பு என்பது, அனைவருக்கும் எளிதான விஷயமாக இருப்பதல்ல. இதனை செய்ய வேண்டும் என்றால், கண்டிப்பாக தனக்குள் நிறைய கட்டுப்பாடுகள் இருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லையென்றால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்க முடியாது. இதற்கு உடற்பயிற்சி செய்வதோடு மட்டுமன்றி, சரியாக டயட் இருக்கவும் வேண்டும். சாதாரணமாக இருப்பவர்களே உடல் எடையை குறைக்க இவ்வளவு மெனக்கெடும் போது, திரை நட்சத்திரங்களாக இருப்பவர்கள்-கேமரா முன்னிலையில் இருப்பவர்கள் கண்டிப்பாக தங்கள் உடலை பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நடிகை பாவனாவும் அப்படி, உடல் எடையை சரியாக பார்த்துக்கொண்டவர்களுள் ஒருவர். அதற்கு என்ன செய்தார் என்பது குறித்து 12 வருடங்களுக்கு முன்னர் கொடுத்திருந்த டிப்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

பாவனாவுக்கு பிடித்த உணவு:

பாவனாவிற்கு சாப்பிட ரொம்ப பிடிக்குமாம். அதிகமாக பயணம் செய்ய விரும்பும் இவர், அந்தந்த நாடுகளின் முக்கிய உணவுகளை பார்க்க பிடிக்குமாம். அதிலும் அவருக்கு மிகவும் பிடித்தது, உஸ்பெகஸ்தான் நாட்டு உணவு என்று கூறியிருக்கிறார். அதே போல, அவருக்கு சைவ உணவுகள் ரொம்ப பிடிகுமாம். சாப்பாட்டுடன் குழம்பு ஊற்றி சாப்பிட மிகவும் பிடிக்குமாம். அப்பளம், பலப்பழம் உள்ளிட்டவற்றை இவருக்கு ஸ்னாக்ஸ் ஆக சாப்பிட பிடிக்குமாம்.

அவாய்ட் செய்யும் உணவுகள்:

எடை ஏறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்த அவர் சில உணவுகளை தனது டயட்டில் இருந்து நீக்கி விட்டாராம். அப்படி அவர் நீக்கிய உணவு பொருட்களுள் ஒன்று, இனிப்பான உணவுகள். இவற்றால் உடலில் கொழுப்பு ஏறுவதோடு, எடையும் கூடும். இதனுடன் சேர்த்து, எண்ணெய் சேர்த்த உணவுகளையும் சேர்த்து தனது டயட்டில் இருந்து நீக்கி விட்டாராம்.

சாப்பிடும் உணவுகள்:

சினிமாவின் உச்சத்தில் இருந்த சமயத்தில், பாவனா ஒரு மாதத்திற்கு 3 முதல் 4 முறை மட்டும்தான் அரிசி உணவையே எடுத்துக்கொள்வாராம். காரணம், இதில் இருக்கும் கார்போ ஹைட்ரேட்ஸ் உடல் எடையை இழக்க விடாமல் செய்யும். எனவே, எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், தங்கள் டயட்டில் இருந்து நீக்கி விடுவர். அப்படித்தான் பாவனாவும் சாப்பாட்டை கட் செய்திருக்கிறார். அதற்கு பதிலாக, சப்பாத்தி எடுத்துக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

யாரைப்போல் உடல் வேண்டும்?

பாவனா, அப்போது பேட்டி கொடுத்த போது தனக்கு ஒரு குறிப்பிட்ட நடிகை போல உடல்வாகு வேண்டுமென கூறியிருக்கிறார். அப்படி அவருக்கு மிகவும் பிடித்த நடிகையின் உடல், பிரியங்கா சோப்ராவினுடையதாம். அவரது உடல், ஃபிட் ஆகவும், நளினமாகவும் இருப்பதால், தனக்கு அது போன்ற உடல் இருந்தால் நன்றாக இருக்கும் என அப்போது கூறியிருந்தார்.

ஜிம்:

அனைத்து நடிகைகளையும் போலவும், பாவனாவும் ஜிம்மிற்கு சென்றிருக்கிறார். ஆனால், பல நாட்களில் அவரால் வர்க்-அவுட் செய்ய முடியாதாம். இருப்பினும், தனது உடலை சரியாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி செய்வதாகவும் அப்பாேது கூறியிருந்தார்.

பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான தரவுகளை வைத்து எழுதப்பட்டவை. இதற்கு ஜீ மீடியா (ZEE TAMIL) பொறுப்பேற்காது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News