3 மாதங்களில் 9 கிலோ எடையை குறைத்த ஜோதிகா! அவரே சொன்ன பிட்னஸ் டிப்ஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா 3 மாதங்களில் எப்படி 9 கிலோ எடையை குறைத்தேன் என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். ஜோதிகாவின் பிட்னஸ் டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Apr 20, 2025, 08:15 AM IST
  • 3 மாதங்களில் 9 கிலோ எடை குறைப்பு.
  • ஜோதிகாவின் பிட்னஸ் ரகசியம்.
  • எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
3 மாதங்களில் 9 கிலோ எடையை குறைத்த ஜோதிகா! அவரே சொன்ன பிட்னஸ் டிப்ஸ்!

46 வயதாகும் நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் ஜோதிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் மூன்று மாதங்களில் எப்படி 9 கிலோ எடையை குறைத்தேன் என்பது பற்றி சமூக வலைதளங்களில் ஜோதிகா பதிவிட்டுள்ளார். உடல் எடையை குறைக்க பொதுவாக அனைவரும் செய்யும் தவறை நானும் செய்தேன். ஆனால் அதற்கு மாற்றாக ஒரு விரிவான அணுகுமுறையால் இதனை என்னால் செய்ய முடிந்தது என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 7 மாதங்களில் 40 கிலோ எடை குறைந்தது எப்படி? சீக்ரட் பகிரும் பெண்!

சக நடிகையான வித்யா பாலனின் உதவியால் மேம்பட்ட பயிற்சிகள் மற்றும் சரி விகித உணவின் மூலம் உடல் எடையை குறைக்க முடிந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் உள்ள பிரபலமான நிறுவனத்திற்கும் ஜோதிகா தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். "உடல் எடையை குறைக்க பொதுவாக பலரும் சாப்பிடாமல் இருப்பது, தினசரி வாக்கிங் செல்வது, கடுமையான உடல் பயிற்சிகளை மேற்கொள்வது என பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவார்கள். இதே போல தான் நானும் பல நடைமுறைகளை கடைபிடித்தேன். ஆனால் அவர் எதுவும் எனக்கு நீண்ட காலத்திற்கு பலன் தரவில்லை. முறையான ட்ரெயினர் மற்றும் வொர்க் அவுட் மூலம் தான் என்னால் உடனடி தீர்வு காண முடிந்தது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

முந்தைய காலங்களில் உடல் எடையை குறைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். தினசரி கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட போதிலும் என்னால் எந்த ஒரு மாற்றத்தையும் உணர முடியவில்லை. இறுதியில் முறையான உணவு மற்றும் சரியான பயிற்சியாளர்களால் தான் என்னால் இதனை செய்ய முடிந்தது. நாம் சாப்பிடும் அளவை குறைப்பதற்கு பதிலாக உணவின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக நம் உடலுக்கு என்ன மாதிரியான உணவுகள் செட் ஆகும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். என்னுடைய செரிமான அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். இது எனது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

மேலும் எனது ஆற்றல் மட்டம் மற்றும் மனநிலை ஆகியவையும் மேம்பட்டது. நாமாக எந்த ஒரு உடற்பயிற்சியும் மேற்கொள்ளாமல் முறையான ட்ரெயினர்கள் மூலம் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். அப்போதுதான் எதற்காக இதனை செய்கிறோம் என்று புரியும். உடல் எடையை குறைக்கும் அதே வேலையில் நமது வலிமையை பேரம் பேச முடியாது. பெண்கள் வயதாகும் போது உடலை சரியான முறையில் பராமரிப்பு அவசியம். வலிமை பயிற்சிகள் எனக்கு அதிகம் உதவியது" என்று தெரிவித்துள்ளார். உடலை முறையாக பராமரிக்க உணவுகளுக்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்வது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் புரோபயாடிக்குகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது செரிமானத்தை கணிசமாக மேம்படுத்தி பசியைக் கட்டுப்படுத்தும். ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஆதரிக்க இந்த கூறுகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன, இறுதியில் சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சிறுநீரில் அதிக நுரை, மஞ்சள் கலர் தென்படுகிறதா? உஷார் மக்களே - இதுதான் காரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News