Kareena Kapoor Weight Loss Yoga Asanas : இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், கரீனா கபூர். இவருக்கு தற்போது 44 வயதாகிறது. டாப் நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து சில காலம் பிரேக் எடுத்தார். இப்போதும் ஏதாவது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சைஃப் அலி கானை திருமணம் செய்து கொண்ட பிறகு இவருக்கு குழந்தைகளும் பிறந்தன. இதனைக்கும் பிறகும் இப்போதும் அவர் தனது உடலை மென்மையாகவும் அழகாகவும் பார்த்துக் கொள்கிறார். உடல் எடையை குறைக்காமலேயே அவர் ஒல்லியாக தெரிவதாக சிலர் கூறுகின்றனர். இதற்கு என்ன காரணம் தெரியுமா?
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் கரீனா!
44 வயதில் ஒரு நடிப்பை ஃபிட்டாக இருக்க வேண்டும் என நினைத்தால் கரீனாவை தொடர்பு கொள்ளலாம். காரணம் இந்த வயதிலும் தான் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு ஒர்க்அவுட் செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்கிறார். இவரது யோகா மாஸ்டர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் கரீனா கபூர் தன்னுடைய சிறந்த மாணவர்களுள் ஒருவர் என்று குறிப்பிட்ட அவர், வெயிட் லாஸை விட உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் தான் கரீனா கவனம் செலுத்தியதாக பேசியிருக்கிறார். அதற்காக அவர் ஆறு யோகாசனங்களை செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஆசனங்கள் என்னென்ன தெரியுமா?
தன்னுடல் குறித்து அறிந்து வைத்திருக்கும் கரீனா..
கரீனா கபூர் குறித்து பேசிய அவரது யோகா மாஸ்டர், தன் உடலைப் பற்றி நன்கு அறிந்தவர்களுள் அவரும் ஒருவர் என்று கூறினார். அவருக்கு யோகா மிகவும் பிடிக்கும் என்று சொன்ன அவர், அனைத்து ஒர்க் அவுட் களுக்கு பிறகும் இன்னும் கொஞ்சம் அதிகமாக செய்ய வேண்டும் என அவரையே அவர் மோட்டிவேட் செய்து கொள்வதாகவும் கூறினார். அதேபோல தனது உடல் ஒரு விஷயத்திற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அதை எப்போது நிறுத்த வேண்டும் எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பதும் அவருக்கு தெரியும் என்றும் கூறியிருக்கிறார்.
கரீனா கபூர் செய்யும் யோகாசனங்கள்..
திரிகோணாசனா:
இந்த யோகா பயிற்சி தொடை மற்றும் முட்டியை பலப்படுத்துவதோடு இடுப்பையும் வலுப்படுத்துவதாக கரீனாவின் யோகா மாஸ்டர் கூறுகிறார். மேலும், இடுப்பின் இரு பக்கங்களில் இருக்கும் தசைகளை குறைக்கும் இந்த பயிற்சி மேல் உடலில் இருக்கும் கொழுப்பை குறைப்பதாக கூறுகிறார்.
Naukasana:
இதனை ஆங்கிலத்தில் Boat Pose என்று குறிப்பிடுகின்றனர். இது மேல் வயிற்றில் இருக்கும் தசையை குறைப்பதோடு முதுகை பலப்படுத்துவதாகவும், தொப்பையை குறைத்து வயிறு பிளாட்டாக உதவுவதாகவும் கூறப்படுகிறது.
அர்த்த மத்ஸ்யேந்திராசனா:
இந்த யோகாசனத்தை அமர்ந்து கொண்டே செய்ய வேண்டும். இது முதுகெலும்புக்கு வலு சேர்ப்பதோடு உள்ளிருக்கும் உடல் பாகங்களை டீடாக்ஸ் செய்வதாக கூறப்படுகிறது. மேலும் மேல் வயிற்றில் இருக்கும் தசைகளை குறைக்கவும் இந்த யோகாசனத்தை பலர் செய்கின்றனர். இடுப்பின் அளவை குறைக்க, இந்த உடற்பயிற்சியை செய்யலாம் என கூறப்படுகிறது.
பரிவ்ரதா உட்காடாசனம்:
இந்த யோகாசனத்தை செய்வதால், உங்கள் தொடை சதை மற்றும் பின்பக்க சதை குறைவதோடு, இடுப்பு தசைகளும் குறையும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான தரவுகளை வைத்து எழுதப்பட்டவை. இதற்கு ஜீ மீடியா (ZEE TAMIL) பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்ய பாவனா செய்த விஷயம்! மாதத்திற்கு 2-3 முறை ‘இதை’ செய்வாராம்..
மேலும் படிக்க | விடாப்பிடி தொப்பையை குறைக்க சூப்பர் வழி! இன்ஸ்டா பிரபலத்தின் எளிமையான டிப்ஸ்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









