Malaika Arora Yoga Asana Tips : உடலை flexibleஆக வைத்துக்கொள்ள வேண்டும் என பலரும் ஆசைப்படுவோம். ஆனால், பெரும்பாலான சமயங்களில் அந்த ஆசை நிராசையாகவே போய் விடும். அப்படி, நம் உடலை நமக்கு ஏற்றார் போல வளைக்க வேண்டும் என்றால், ஒன்று யோகாசனம் செய்ய வேண்டும், அப்படி இல்லையென்றால் நன்றாக நடனம் ஆட வேண்டும். இதில், பலருக்கு நடனம் என்பதை நல்ல ஆப்ஷனாக கருதப்படுவதில்லை. ஆனால், யோகாவை தொடக்கத்தில் இருந்து கூட சிலர் கற்றுக்கொண்டு செய்யலாம்.
யோகா+டயட்:
நடிகைகள் அனைவருமே, எப்போதும் கேமராவிற்கு முன் இருப்பதால் தங்களின் உடலையும் அழகையும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதனால், அவர்கள் அதற்கென்ற பிரத்யேக டயட், யோகா, உடற்பயிற்சிகள் ஆகியவற்றை பின்பற்றுகின்றனர். அப்படித்தான், தன் உடலை பராமறிக்கவும் மலைகா சில பிரத்யேக டயட்டுகளையும் உடற்பயிற்சிகளையும் பின்பற்றுகின்றனர்.
மலைகா அரோரா:
பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் மலைகா அரோரா. இவர், முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார். 51 வயதாகும் இவர், இந்த வயதிலும் கட்டுடலுடன் கவர்ச்சியாக இருக்கிறார். இதற்கு இவருக்கு உதவியாக இருப்பது, யோகாசனம்தான். இவர், தொடக்க யோகாசனம் முதல், கடினமான யோகாசனங்கள் வரை பலவற்றை செய்வார். அப்படி, உடலை ஃபிட்டாகவும் கவர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள அவர் செய்யும் சில யோகாசனங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
விருக்ஷாசனம்:
விருக்ஷாசனம், உடலின் சமநிலை, நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது. அது மட்டுமன்றி, கால்களையும் வயிற்று தசையையும் வலுப்படுத்தும் இந்த யோகாசனம், இடுப்பை வளைத்து நெளிக்கவும், உடலை நமக்கு ஏற்றார் போல வளைக்கவும் உதவுகிறது. இது, முதுகுத்தண்டை சரியான தோரணையில் வைக்கவும் உதவுகிறது. உடல் ரீதியாக மட்டுமன்றி மன ரீதியாகவும் சரியான நிலையை பெற, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க இந்த யோகாசனம் உதவுகிறது.
வீரபத்ராசனம்:
வீரபத்ராசனம், கால்கள்மற்றும் கைகளை வலிமையாக்குகிறது. அது மட்டுமன்றி உடலின் ஸ்டாமினாவை அதிகரிகும் இது மார்பை விரிக்க செய்து நமக்கு தன்னம்பிக்கையும் உடலுக்கு சக்தியையும் அதிகரிக்கிறது. மேல் உடலில் இருக்கும் டென்ஷனை குறைக்க இந்த யோகாசனம் உதவுகிறது.
பத்மாசனம்:
பத்மாசனம் உடற்பயிற்சியை பெரும்பாலானவர்கள், தியானம் பயிற்சியாக மேற்கொள்வர். இது, இடுப்பையும், முட்டியையும், கணுக்கால்களையும் நமக்கு ஏற்றவாறு வளைக்க உதவும். அது மட்டுமல்ல, நொடிப்பொழுதில் மனதை சாந்தப்படுத்துவதோடு முதுகுத்தண்டை நேராக வைக்கவும் சரியான தோரணையில் அமரவும் உதவுகிறது. உடல் முழுவதும் சரியாக ரத்த ஓட்டம் செல்ல பயன்படும் இந்த யோகாசனம், குறிப்பாக கீழ் உடல் பகுதியில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. குறிப்பாக கால்கள் மற்றும் கணுக்கால்கள் இதனால் பயனடைகின்றன.
மேலும் படிக்க | 73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை!! தினமும் சாப்பிடும் ஒரே வறுத்த உணவு..
மேலும் படிக்க | 3 மாதத்தில் 16 கிலோ எடை குறைந்த ஆலியா பட்! வெறும் வயிற்றில் ‘இதை’ குடிப்பாராம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









