Mrunal Thakur Weight Loss Diet Tips : சமீபத்திய சென்சேஷனல் நடிகைகளுள் ஒருவராக விளங்கி வருபவர், மிருணாள் தாகூர். இவரை அனைவரும் சீதா ராமம் திரைப்படம் மூலம் பெரிதாக அறிந்து கொண்டனர். இதையடுத்து இவர் நடித்த ஹாய் நன்னா திரைப்படமும் பெரிய ஹிட் அடித்தது. பிற ஹீரோயின்கள் ஒல்லி தேகத்துடன் வலம் வர, இவர் கொஞ்சம் வித்தியாசமாக Curvy-ஆன உடல் வாகு கொண்ட நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இருப்பினும் தனது எடையை அப்படியே மெயின்டெயின் செய்ய-எடை குறைக்க அவர் குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?
டயட்: மிருணாள் தாகூரின் டயட்டில் இருக்கும் முக்கிய உணவுகளுள் புரதம் நிறைந்த சில உணவுகள்தான் இருக்குமாம். அவரது சாப்பாட்டில், பெரும்பாலும் க்ரில் செய்த காய்கறிகள், பிரவுன் பிரெட், பழங்கள் மற்றும் முட்டை ஆகியவைதான் இடம் பெற்றிருக்கும் என பேசிக்கொள்கின்றனர்.
அது மட்டுமன்றி, அவர் தேவையில்லாமல் கடை உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்த்து விடுவாராம். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகியவை இவரது டயட்டி இருந்து தவிர்க்கப்பட்ட உணவுகள் ஆகும்.
ஸ்னாக்ஸ்:
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றும் மிருணாள் தாகூர், தனது ஸ்னாக்ஸையும் ஹெல்தியாகவே சாப்பிடுகிறார். ஓட்ஸ் வைத்து செய்யப்பட்ட பிஸ்கட்டுகள், நட்ஸ், பூசணி விதைகள் உள்ளிட்டவை இவரது ஃபேவரட் ஸ்னாக்ஸ் ஆகும். அதே போல சோயா பால், புரோட்டீன் ஷேக்ஸ் ஆகியவையும் இதில் அடங்கும்.
எனர்ஜி கொடுக்கும் உணவு!
மிருணால் தாகூர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், வர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர் “நான் தினமும் வர்க்-அவுட் செய்வதற்கு காரணமே போஹாதான்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது அவருக்கு ஜிம் செல்ல மோட்டிவேஷனாக விளங்குகிறது.
போஹா என்றால் என்ன?
இந்தியாவில் அதிகம் பிரபலமான உணவுகளுள் ஒன்று, போஹா. இதனை இதனை அவல் வைத்து செய்கின்றனர். இந்தியாவின் பலரது இல்லங்களில் இதனை காலை உணவாக எடுத்துக்கொள்கின்றனர். இது, விரைவாக செய்யப்படும் உணவு என்பதை தாண்டி, ஆரோக்கியம் நிறைந்த உணவாகவும் எளிதில் ஜீரணமாகும் உணவாகவும் இருக்கிறது.
இதில் இரும்பு சத்தும் ஃபைபர் சத்தும் அதிகமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இதனை சாப்பிடலாம். இது, வயிற்றை லேசாக வைக்க உதவுவதுடன் சுவையான உணவாகவும் இருக்கிறது. மேலும், இது அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் உணவுகளுள் ஒன்றாகும்.
நீர்ச்சத்து:
எடையை குறைக்க வேண்டும் என்றால், உடலில் நீர்ச்சத்து தங்கியிருப்பதும் அவசியம். இதனை கடைப்பிடிக்கும் மிருணாள் தாகூர், தினமும் 8 டம்ளர் தண்ணீரை தவறாமல் குடித்து விடுவாராம். அதுவும் எடையை குறைக்க சுடு தண்ணீர் உதவும் என்று தெரிந்து கொண்ட இவர், நன்கு காய்ச்சி ஆற வைத்த தண்ணீரைத்தான் குடிப்பதாக கூறப்படுகிறது.
மிருணாளுக்கு பிடித்த உணவுகள்:
மிருணாள் தாகூர், சீட் டேவில் தனக்கு பிடித்த உணவுஅக்ளை சாப்பிடவும் செய்வாராம். அதிலும் குறிப்பாக இவருக்கு பீட்சா, பாஸ்தா, சீஸ் மற்றும் கேக் ஆகியவை சாப்பிட பிடிக்குமாம். இதை பேலன்ஸ் செய்யும் வகையில், அதற்கேற்றவாறு டயட்டும் இருக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், பிற இணைய பக்கங்களில் இருந்த தகவல்களை வைத்து எழுதப்பட்டவை. இதை நாங்கள் உறுதி செய்யவில்லை. இதற்கு ஜீ மீடியா எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 2 வருடத்தில் 30 கிலோ குறைத்த நடிகை சோனாக்ஷி! வெறும் வயிற்றில் ‘இதை’ செய்வாராம்..
மேலும் படிக்க | 3 மாதத்தில் 16 கிலோ எடை குறைந்த ஆலியா பட்! வெறும் வயிற்றில் ‘இதை’ குடிப்பாராம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ