வெயிட் லாஸ் செய்ய நமிதா சொல்லும் பானம்! காலையில் வெறும் வயிற்றில் குடிக்கனுமாம்..

Namitha Healthy Drink For Weight Loss: பிரபல நடிகை நமிதா, உடல் எடையை குறைக்க ஒரு குறிப்பிட்ட ஜூஸை பருக வேண்டும் என்று கூறுகிறார். அது என்ன ஜூஸ் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 30, 2025, 06:39 PM IST
  • வெயிட் லாஸுக்கு உதவும் பவுடன் பானம்!
  • நார்ச்சத்தும் அதிகம்..
  • நமித பரிந்துரைப்பது..
வெயிட் லாஸ் செய்ய நமிதா சொல்லும் பானம்! காலையில் வெறும் வயிற்றில் குடிக்கனுமாம்..

Namitha Healthy Drink For Weight Loss: தமிழில் பிரபல நடிகையாக விளங்குவர், நமிதா. இவர், உடல் எடையை குறைப்பதற்கு சமீபத்தில் ஒரு டிப்ஸ் கொடுத்திருக்கிறார். அது குறித்த தகவலை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

கோலிவுட் திரையுலகில், பிரபல கவர்ச்சி நடிகையாக விளங்கியவர் நமிதா. இளமை காலத்தில், பல படங்களில் ஹீரோயினாக நடித்த இவர், கவர்ச்சி நடிகையாக மாறினார். 43 வயது நமிதா, தற்போது திருமணத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிப்பதில்லை. இவர், உடல் எடையை குறைப்பதற்காக சில டிப்ஸை கொடுத்திருக்கிறார். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

நமிதா குடிக்க சொன்ன பானம்:

பலருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய உணவு பொருட்களுள் ஒன்று, முருங்கையிலை. இது, உடல் எடையை குறைக்கவும் உதவுமாம். இதன் பொடியை, தண்ணீரில் கலந்து குடித்தால், அது கலோரி இழப்பிற்கு உதவும் என்று கூறுகிறார் நமிதா. 

பசியை கட்டுப்படுத்தும்..!

உடல் எடை அதிகரிப்பதே, நமக்கு பசி அதிகமாகும் போது அதிகமாக சாப்பிடுவதுதான். ஆனால், முருங்கை இலை இது போன்ற பசியை கட்டுப்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதை தடுக்குமாம். மேலும், பசி குறைவதோடு, எடையும் ஏறாமல் இருக்கும்.

நார்ச்சத்து:

முருங்கை சாறில், இருக்கும் சத்துக்களும் உடலுக்கு புரத சத்துகளை அளிக்கும். இதில் இருக்கும் குறைந்த கலோரி, உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கும். இதில் நிறைய நார்ச்சத்தும் உள்ளது. இதனால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், முருங்கைச்சாறில் துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம் கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்டவையும் உள்ளன.

கொழுப்பை எரிக்க உதவும்..

முருங்கைக்கீரை சாறை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், அது கொழுப்பை எரிக்கவும் உதவுமாம். அது மட்டுமன்றி, சர்க்கரை நோயாளிகள் இதனை குடிப்பதால் உடலில் சர்க்கரை அளவு ஏறுவதை கட்டுப்படுத்தி, இன்சுலின் அளவு உடலில் அதிகரிக்கும் அபாயத்தையும் குறைப்பதாக கூறப்படுகிறது.

சாறை செய்வது எப்படி?

முருங்கை இலையை நன்கு கழுவி, அதனை பொடியாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து சாறினை வடிக்கட்ட வேண்டும். வேண்டுமானால், இதில் சீரகமும் சேர்த்துக்கொள்ளலாம். வடிக்கட்டி எடுத்த பொடியை தண்ணீரை கொதிக்க வைத்து, அதனை ஒரு டம்ளர் நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனுடன் தேவைப்பட்டால் சுவைக்காக லெமன் சேர்த்துக்கொள்ளலாம்.

முருங்கை இலையின் பிற பயன்கள்:

முருங்கை இலை பொடியை இப்படி கொதிக்க வைத்து குடிப்பதால், நமது ஒட்டுமொத்த உடல் நலனிற்கும் நன்மை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுவதோடு, உடல் எடையை குறைக்கவும் வழி வகுக்கிறது. நமீதாவின் இந்த டிப்ஸை நீங்களும் ஃபாலோ செய்வீர்களா?

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நடிகைகள் எப்போதும் இளமையாக இருக்கக் காரணம் இதுதானா? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

மேலும் படிக்க | ஒல்லியாக இருக்க சாய் பல்லவி பருகும் ஒரே ஒரு பானம்! இயற்கையானது-நீங்களும் குடிக்கலாம்..

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News